கொரோனா காலத்தில் செல்லப் பூனைகளை விட்டு தள்ளியே இருங்கள்… எச்சரிக்கும் புதிய அறிவிப்பு!!!

 

கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் பற்றிய அச்சத்தை விஞ்ஞானிகள் தற்போது வரை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் நாம் செல்லப் பிராணிகளாக வளர்க்கும் பூனைகளுக்கு எளிதில் கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் தற்போது எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

விஞ்ஞானிகள் மேற்கொண்ட புதிய ஆய்வு ஒன்றில் கொரோனா வைரஸின் புதிய மரபணு அமைப்பில் பூனைகளை எளிதில் தொற்றிக்கொள்ளும் தன்மை இருப்பதாகக் கூறியுள்ளனர். பார்சிலோனாவை தலைமையிடமாகக் கொண்ட ஜீனோமிக் ஒழுங்குமுறை மையத்தில் மேற்கொண்ட ஆய்வில் இந்த உண்மை தெரியவந்துள்ளது. அதாவது கடந்த ஜுன் மாதம் அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள பூங்கா ஒன்றில் முதன் முதலாக புலிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. அதையடுத்து பூனை, சிங்கம், கீரி போன்ற விலங்குகளுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானிகள் பூனைகளை எளிதில் தொற்றிக்கொள்ளும் மரபணு வரிசையை கொரோனா கொண்டிருப்பதாகக் கூறியுள்ளனர். இப்படி பூனைகளை எளிதில் தொற்றில் கொள்ளும் தன்மையை கொரோனா கொண்டிருப்பதால்தான் புலி, சிங்கம் போன்ற விலங்குகளுக்கும் அடுத்தடுத்து கொரோனா ஏற்படுவதாக அந்த விஞ்ஞானிகள் சந்தேகத்தை வெளிப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து முழுமையான தகவல்கள் அனைத்தும் Plos கணக்கீட்டு உயிரியல் ஆய்வு இதழில் வெளியிடப்பட்டு உள்ளது.

கோடான் தழுவல் குறியீடு Codon adaptation index கொரோனா வைரஸில் அதிகம் இருப்பதால் பூனையை அதிகம் பாதிக்கும் தன்மையை கொரோனா வைரஸ் கொண்டிருக்கிறது. இதனால் பூனையை செல்லப் பிராணியாக வளர்க்கும் மக்கள் அனைவரும் பூனையை விட்டு தள்ளி இருக்குமாறு எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.

More News

கன்பெக்சன் அறையில் கதறி அழும் அர்ச்சனா: ஸ்பெஷல் பவரை பெற நாடகமா?

பிக்பாஸ் வீட்டில் தற்போது நடைபெற்று வரும் கோழிப்பண்ணை டாஸ்க், லக்சரி பட்ஜெட் டாஸ்க் மட்டுமின்றி அதில் வெற்றி பெறும் ஒருவருக்கு ஸ்பெஷல் பவர் கிடைக்கும் என்றும் பிக்பாஸ் அறிவித்திருந்தார்

அர்ச்சனாவை ரவுண்டு கட்டிய ரியோ, சோம்: உடைகிறதா அன்பு குரூப்?

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு டாஸ்க்கின் போதும் போட்டியாளர்கள் போர்க்களம் போல் விளையாடி வருகின்றனர் என்பதும் இந்த டாஸ்க்கின் காரணமாகத்தான் ஒருவருக்கொருவர் பகைமை ஏற்பட்டு

முதல் நாள் படப்பிடிப்பில் விக்னேஷ் சிவனை கலாய்த்த சமந்தா!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிக்கும், 'காத்துவாக்குல ரெண்டு காதல்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது என்பதை பார்த்தோம்

ஆள் அரவம் இல்லாத இடத்தில் அடிக்கடி முளைக்கும் உலோகத்தூண்… விலகுமா மர்மம்?

கடந்த நவம்பர் 18 ஆம் தேதி அமெரிக்காவின் உட்டா பாலைவனப் பகுதியில் திடீரென்று ஒரு உலோகத்தூண் முளைத்தது.

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியின் கழுத்தை அறுத்த வாலிபர்: தஞ்சையில் பரபரப்பு!

நிர்பயாவுக்கு கொடுமை நடந்த அதே நாளில் இன்று ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவி ஒருவரை வாலிபர் ஒருவர் கழுத்தை அறுத்த சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது