கொரோனா காலத்தில் செல்லப் பூனைகளை விட்டு தள்ளியே இருங்கள்… எச்சரிக்கும் புதிய அறிவிப்பு!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் பற்றிய அச்சத்தை விஞ்ஞானிகள் தற்போது வரை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் நாம் செல்லப் பிராணிகளாக வளர்க்கும் பூனைகளுக்கு எளிதில் கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் தற்போது எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
விஞ்ஞானிகள் மேற்கொண்ட புதிய ஆய்வு ஒன்றில் கொரோனா வைரஸின் புதிய மரபணு அமைப்பில் பூனைகளை எளிதில் தொற்றிக்கொள்ளும் தன்மை இருப்பதாகக் கூறியுள்ளனர். பார்சிலோனாவை தலைமையிடமாகக் கொண்ட ஜீனோமிக் ஒழுங்குமுறை மையத்தில் மேற்கொண்ட ஆய்வில் இந்த உண்மை தெரியவந்துள்ளது. அதாவது கடந்த ஜுன் மாதம் அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள பூங்கா ஒன்றில் முதன் முதலாக புலிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. அதையடுத்து பூனை, சிங்கம், கீரி போன்ற விலங்குகளுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானிகள் பூனைகளை எளிதில் தொற்றிக்கொள்ளும் மரபணு வரிசையை கொரோனா கொண்டிருப்பதாகக் கூறியுள்ளனர். இப்படி பூனைகளை எளிதில் தொற்றில் கொள்ளும் தன்மையை கொரோனா கொண்டிருப்பதால்தான் புலி, சிங்கம் போன்ற விலங்குகளுக்கும் அடுத்தடுத்து கொரோனா ஏற்படுவதாக அந்த விஞ்ஞானிகள் சந்தேகத்தை வெளிப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து முழுமையான தகவல்கள் அனைத்தும் Plos கணக்கீட்டு உயிரியல் ஆய்வு இதழில் வெளியிடப்பட்டு உள்ளது.
கோடான் தழுவல் குறியீடு Codon adaptation index கொரோனா வைரஸில் அதிகம் இருப்பதால் பூனையை அதிகம் பாதிக்கும் தன்மையை கொரோனா வைரஸ் கொண்டிருக்கிறது. இதனால் பூனையை செல்லப் பிராணியாக வளர்க்கும் மக்கள் அனைவரும் பூனையை விட்டு தள்ளி இருக்குமாறு எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout