50 ஆயிரம் கோடி முதலீட்டில் புதிய EV தொழிற்பூங்கா!!! 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு!!! முதல்வரின் அடுத்த அதிரடி!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்தில் மின்சார வாகன உற்பத்தி (EV) பூங்கா அமைக்கப் படவுள்ளது. இதற்காக மின்சார வாகன உற்பத்தி சூழல் அமைப்பில் பிரத்யேகமாக புதிய EV பூங்காவை தொடங்குவதற்கான அறிவிப்பை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். EV பிரிவில் ரூ. 50 ஆயிரம் கோடி முதலீட்டில் இந்த தொழிற்பூங்கா உருவாக்கப் படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் மின்சார வாகன உற்பத்தித் துறையில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகப் பல்வேறு சலுகைகளையும் முதல்வர் அறிவித்து இருக்கிறார்.
அதன்படி முழு ஜிஎஸ்டி திரும்ப பெறுதல் மற்றும் 50% மூலதன மானியம் போன்ற சலுகைகளும் அறிவிக்கப் பட்டுள்ளது. இந்தத் தொழிற்பூங்கா 300 ஏக்கர் நிலப்பரப்பில் அமையவிருப்பதகாவும் கூறப்படுகிறது. ஏற்கனவே தமிழகம் ஆட்டோ மொபைல் துறையில் சிறந்து விளங்கும் மாநிலமாக திகழ்ந்து வருகிறது. தறபோது மின்சார வாகன உற்பத்தி பூங்கா அமைப்படுவதன் மூலம் மேலும் தமிழகத்தின் பொருளாதாரம் உயரும் எனவும் கருத்துக் கூறப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் அமையவுள்ள புதிய EV தொழிற் பூங்காவிற்காக வாகன தயாரிப்பாளர்கள் எதர் எனர்ஜி, மஹல் எலக்ட்ரிக், பி.ஒய்.டி உள்ளிட்ட சப்ளையர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகி இருக்கிறது. இதுவரை நாட்டின் வாகன உதிரிபாக உற்பத்தியில் மாநிலத்தின் பங்கு 35% ஆகவும் நான்கு சக்கர வாகன உற்பத்தியில் கிட்டத்தட்ட 30% மாநிலத்துக்கு சேர்ந்தது என்றும் குறிப்பிடத்தக்கது. தற்போது அனைத்து ஆட்டோ பிரிவுகளையும் உள்ளடக்கிய 350 க்கும் மேற்பட்ட OEM க்கள் மற்றும் 350 க்கும் மேற்பட்ட ஆட்டோ காம்போன்ட் பிளேயர்கள் மற்றும் மாநிலத்தில் டயர்ஸ் –IV இன் கீழ் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட SME க்கள் உள்ளன.
இதன்மூலம் ஒவ்வொரு ஆண்டும் 1.71 மில்லியன் பயணிகள் வாகனங்கள் மற்றும் 4.82 மில்லியன் இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்வதற்கான உற்பத்தித் திறன் தமிழகத்திற்குக் கிடைத்துள்ளது. கொரோனா பேரிடர் காலத்திலும் இதுவரை தமிழக அரசு ரூ. 30,664 கோடி மதிப்புள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு இருக்கிறது. அதில் ரூ. 3,500 கோடி வாகனத்துறையைச் சார்ந்தவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments