விடுமுறை எடுத்து பொறியியல் படிக்கலாம், M.Phil படிப்பு இனி கிடையாது: புதிய கல்விக்கொள்கை அறிவிப்பு
- IndiaGlitz, [Wednesday,July 29 2020]
புதிய கல்வி கொள்கையின் வரைவு அறிக்கை நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்த கல்விக்கொள்கையில் உள்ள முக்கிய விபரங்களை தற்போது பார்ப்போம்.
இனி M.Phil படிப்பு என்பது இல்லை. M.Phil படிப்புகள் நிறுத்தப்படும்
6-ம் வகுப்பு முதலே கைத்தொழில் கல்வி அறிமுகம். கல்வி நிறுவனங்களில் இனி மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படும்
டிகிரி படிப்பு என்பது இனி 3 அல்லது 4 ஆண்டுகளாக இருக்கும்.
2030-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் கல்வி என்ற இலக்கு நிறைவேற்றப்படும்
இணையவழியில் கல்விசார் படிப்புகள் தொடங்கப்படும். பள்ளிகள் டிஜிட்டல் மயமாக்கப்படும். தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் கல்விசார் படிப்புகள் இணையவழியில் தொடங்கப்படும்
உயர்கல்விக்கான அமைப்புகளை ஒழுங்குபடுத்த ஒரே வாரியம் அமைக்கப்படும்
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் மென்பொருள் உருவாக்கப்படும்
பொறியியல் போன்ற உயர்படிப்புகளில் ஓரிரு வருடங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு பின்னர் படிப்பை தொடரலாம்
தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் நிர்ணயிக்கும் கட்டணங்கள் வெளிப்படையாகவும் முழுமையாகவும் வெளியிடப்படும். கல்விக் கட்டணங்கள் தன்னிச்சையாக அதிகரிக்கப்படாது
2030-க்குள் அனைவருக்கும் கல்வி என்பதை உறுதிப்படுத்தவே புதிய கல்விக் கொள்கை. நாடு முழுவதும் கல்வித்தரம் ஒரே மாதிரியாக அமைந்திருக்கும்
இவ்வாறு புதிய கல்விக்கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.