புதிதாகப் பரவும் தொற்றுநோய் Disease X… இது நோய்க்கிருமி தாக்கும் காலக்கட்டமா??? விளக்கும் வீடியோ!!!

  • IndiaGlitz, [Tuesday,January 05 2021]


 

கொரோனா ஆரம்பித்ததில் இருந்தே தொற்று நோய் பற்றிய பீதி மனிதர்களை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் ஆப்பிரிக்க நாடான காங்கோவில் புதிய தொற்று நோய் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மேலும் இத்தொற்றுநோய் கொரோனாவை விட மிக வேகமாகப் பரவும் தன்மைக் கொண்டது என்றும் விஞ்ஞானிகள் விளக்கம் அளித்து உள்ளனர்.

காங்கோவில் புதிய வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு எபோலா மற்றும் கொரோனா போன்ற பல்வேறு நோய்த்தொற்றுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. ஆனாலும் இப்புதிய தொற்று நோயை அடையாளம் காணமுடியவில்லை என்றே விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். இதனால் அத்தொற்றை X என விஞ்ஞானிகள் அழைத்து வருகின்றனர். மேலும் இப்புதிய தொற்று நோய் ரத்தக்கசிவு உள்ள காய்ச்சல் போன்ற பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்றும் அந்த விஞ்ஞானிகள் விளக்கம் அளித்து உள்ளனர்.

ஏற்கனவே உருமாறிய கொரோனா வைரஸ் அச்சுறுத்தலினால் இங்கிலாந்து முழுவதும் முழு ஊரடங்கு போடப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் இன்றுவரை பாதிப்பு எண்ணிக்கை குறையாமல் தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் உருமாறிய கொரோனா வைரஸில் மேலும் 4 வகைகள் இருப்பதாகவும் அது மேலும் தீவிர பாதிப்பை ஏற்படுத்தி வருவதாகவும் உலகச் சுகாதார அமைப்பு அச்சம் தெரிவித்து உள்ளது. இந்நிலையில் பயன்பாட்டுக்கு வந்துவிட்ட கொரோனா தடுப்பூசியின் செயல்திறனை புதிய வைரஸ்கள் குறைத்து விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

உலகம் முழுவதும் இத்தகைய நெருக்கடியான நிலைமை நீடிக்கும்போது ஆப்பிரிக்காவின் மலைக் காடுகளில் இருந்து பல்வேறு புதிய வைரஸ்கள் தற்போது பரவ ஆரம்பித்து உள்ளதாக விஞ்ஞானி ஜான் டாம்ஃபம் தெரிவித்து உள்ளார். இவர் கடந்த 1976 ஆம் ஆண்டு எபோலா வைரஸை முதன் முதலாக அடையாளம் கண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆப்பிரிக்க காடு அழிப்பை குறித்து கவலைத் தெரிவித்து வரும் இவர் கடந்த சில ஆண்டுகளாக அப்பகுதியில் முகாமிட்டு வைரஸ் தொற்று குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்.

தற்போது காங்கோவில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் தொற்று குறித்து இவர் கருத்தும் வெளியிட்டு இருக்கிறார். அதில் “தற்போது புதிய நோய்க்கூறு வைரஸ்கள் நம்மைத் தாக்கும், அச்சுறுத்தல் காலக்கட்டத்தில் இருக்கிறோம். இதுவும் மனிதக்குலத்துக்கு அச்சுறுத்தல்தான்” எனத் தெரிவித்து உள்ளார். மேலும் புதிய வைரஸ் கோவிட் 19 ஐ விடவும் கொடியதாகவே இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் விலங்குகளிடம் இருந்து மனிதனிடத்தில் பரவும் வைரஸ்கள் நுண்கிருமிகளும் அதிகரிக்கும் என்றும் கூறிய அவர், காடுகளை அழிப்பதால் வன விலங்குகள் பறவைகள் இருக்கும் இடங்களை விட்டு மனிதர்கள் வாழும் இடங்களை நோக்கி படையெடுக்கின்றன. அதனால் இதுபோன்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கிறது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

More News

0.5% க்கும் குறைந்த வேலைவாய்ப்பின்மை… இந்திய அளவில் அசத்தும் தமிழகம்!!!

கொரோனா நேரத்திலும் தமிழகத்தின் தொழில்துறை பல மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது. அதனால் வேலைவாய்ப்பின்மையும் கணிசமாக குறைந்து உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஊழியருக்காக உருகும் பணக்கார முதலாளி…  ரத்தன் டாடா பற்றிய நெகிழ்ச்சி சம்பவம்!!!

இந்தியாவின் மிகப்பெரிய தொழில் நிறுவனமான டாடா குழுமத்தின் செயல் அதிகாரி ரத்தன் டாடா. இந்நிறுவனம் உலகின் 83 நாடுகளில் கிளைப்பரப்பி இருப்பதோடு மேலும் மருத்துவம்,

டிஎஸ்பி மகளுக்கு சல்யூட் வைத்த போலீஸ் தந்தை… நெகிழ்ச்சி ஏற்படுத்தும் வைரல் புகைப்படம்!!!

ஆந்திர மாநிலத்தில் பணியில் இருந்த காவல் ஆய்வாளர் ஒருவர் டிஎஸ்பியாக இருக்கும் தனது சொந்த மகளுக்கு பெருமிதத்தோடு சல்யூட் வைத்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார்.

ஏலியன் குறித்த வெளியான அதிர்ச்சி தகவல்… விலகுமா மர்மம்?

ஏலியன் இருப்பது உண்மையா என்பது தற்போதுவரை கேள்வியாகவே இருந்து வருகிறது.

ஆம்பள பையனான்னு கேட்டா யாருக்கு தான் கோபம் வராது: தனியே புலம்பிய பாலா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றும் இன்றும் ஃபினாலே டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில் இந்த டாஸ்க்கில் முதல் இடம் பிடித்து நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வேண்டும் என்று அனைத்து போட்டியாளர்களும்