கொரோனாவை கண்டறியும் புதிய உபகரணம்: இந்திய தனியார் நிறுவனம் அசத்தல்
- IndiaGlitz, [Tuesday,March 24 2020]
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மனித இனத்தையே அச்சுறுத்தி வரும் நிலையில் இந்த வைரஸை கட்டுப்படுத்த தடுப்பூசி மற்றும் மருந்துகள் கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் தீவிர முயற்சியில் உள்ளனர். இதற்காக கோடிக்கணக்கான ரூபாயை ஆராய்ச்சி கூடங்கள் செலவு செய்து வருகின்றன.
இந்த நிலையில் புனேவை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று கொரோனாவை கண்டறியும் புதிய உபகரணத்தை கண்டுபிடித்துள்ளது. இதனை பயன்படுத்த மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த உபகரணத்தின் மூலம் ஒரு வாரத்தில் 1.5 லட்சம் சோதனைகள் வரை மேற்கொள்ள முடியும் என்றும் இந்த கருவியின் விலை ரூ.80000 என்றும், ஒரு கருவியில் 100 பேரை சோதிக்க முடியும் என்றும் தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.