அமெரிக்காவில் தெலுங்கு நடிகைகளின் பாலியல் தொழில் குறித்த புதிய தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவில் தெலுங்கு நடிகைகளை வைத்து பாலியல் தொழில் செய்ததாக தொழிலதிபர் கிஷான் என்பவரும் அவருடைய மனைவியும் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யபப்ட்டு வருகின்றனர். அவர்களிடம் செய்த விசாரணையில் அமெரிக்காவில் உள்ள பணக்கார இந்தியர்களுக்கு தெலுங்கு நடிகைகளை சப்ளை செய்தது மட்டுமின்றி தொழிலதிபரின் மனைவியும் மூன்று மணி நேரத்திற்கு $2500 என்ற விலையில் பாலியல் தொழில் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் பாலியல் தொழில் செய்யும் கும்பலை பிடிக்க சிகாகோ போலீசார் கடந்த நவம்பர் மாதத்தில் இருந்தே குறிவைத்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் தெலுங்கு நடிகை ஒருவர் சிகாகோ வந்தபோது அவருடைய பாஸ்போர்ட் சோதனை செய்யப்பட்டது. அப்போது அவர் சிகாகோவில் நடைபெறவுள்ள ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் அவர் கூறிய நிகழ்ச்சி ஏற்கனவே முடிந்துவிட்டது என்பதும், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களின் பட்டியலில் அந்த நடிகையின் பெயர் இல்லை என்பதும் தெரியவந்தது.
மேலும் அவர் வைத்திருந்த விசா, கிஷான் மற்றும் அவருடைய மனைவியின் ஏற்பாட்டால் வழங்கப்பட்ட போலி விசா என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து கிஷானை தங்கள் வளையத்திற்குள் கொண்டு வந்த சிகாகோ போலீசார் தக்க சமயத்தில் பொறிவைத்து பிடித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com