வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை!!! பாதிப்பு யார் யாருக்கு???
Send us your feedback to audioarticles@vaarta.com
நாளை (ஆகஸ்ட் 4) வடக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்து உள்ளது. இதனால் தென்மேற்கு பருவமலை மேலும் வலுவடையும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டு இருக்கிறது. ஏற்கனவே தென்மேற்கு பருவமலை ஆரம்பித்து இருப்பதால் தற்போது உருவாகவுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுநிலையால் மேலும் மழை அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.
இதனால் கடலோர மாநிலங்களான குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா போன்ற பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வுமையம் குறிப்பிட்டு இருக்கிறது. இதனால் கர்நாடகா மற்றும் கேரளாவிற்கு அடுத்த 5 நாட்களுக்கு ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே ஆரம்பித்துவிட்ட தென்மேற்கு பருவமழ மற்றும் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக இந்த மாநிலங்களின் சில பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதைத்தவிர கோவா, மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு ரெட் அலார்ட்டும் விடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாநில மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளனர்.
அதைத்தவிர மத்திய மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை மையம் குறிப்பிட்டு இருக்கிறது. தென்மேற்கு, மத்திய மேற்கு, மன்னார் வளைகுடா, அரபிக்கடல் பகுதிகளில் உள்ள மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப் பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments