அந்தமான் அருகே புதிய காற்றழுத்தம்: சென்னை தப்பிக்குமா?
- IndiaGlitz, [Saturday,December 02 2017]
கடந்த சில வாரங்களாகவே வடகிழக்கு பருவமழை மற்றும் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தின் பெரும்பாலான ஏரிகள், அணைகள் முழு கொள்ளளவை நெருங்கி வரும் நிலையில் நேற்று அடித்த ஓகி புயலால் தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் அந்தமான் அருகே மீண்டும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதிய் புயலாக மாற வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறினால் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மேலும் வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையை சுட்டிக்காட்டி மத்திய நீர்வளத்துறை தமிழகம், கேரளா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது. வங்கக்கடலில் புதியதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் டிசம்பர் 2, டிசம்பர் 4 மற்றும் டிசம்பர் 5ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் அணைகளை கண்காணிக்கும்படி தமிழக அரசுக்கு மத்திய நீர்வளத்துறை அறிவுற்த்தியுள்ளது.
ஏற்கனவே பஞ்சாங்கத்தில் டிசம்பர் 9 முதல் 12 வரை சென்னையில் கனமழை பெய்யும் என்றும் நகரம் வெள்ளத்தில் மிதக்கும் என்றும் மின்சாரம் இருக்காது என்றும் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருவதால் சென்னைவாசிகள் மீண்டும் ஒரு 2015 டிசம்பர் நிலைமையை சந்திப்பார்களா? என்ற அச்சம் எழுந்துள்ளது.