ஒமைக்ரானைத் தொடர்ந்து புது உருமாறிய வைரஸ் கண்டுபிடிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் ஆல்பா, பீட்டா வரிசையில் ஒமைக்ரான் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதிவேகமாகப் பரவும் தன்மைக் கொண்ட இந்தக் கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது உலக நாடுகளையே ஸ்தம்பிக்க வைத்திருக்கிறது. இந்நிலையில் ஐஎச்யு பி.1.640.2 என்ற புதிய திரிபு பிரான்ஸ் நாட்டில் கண்டுப்பிடிக்கப்பட்டு உள்ளது.
மத்திய ஆப்பிரிக்கா நாடான கேமரூனில் இருந்து பிரான்ஸ் நாட்டிற்கு வந்த 12 பேரிடம் புதிய வேரியண்ட் கொரோனா வைரஸ்க்கான அறிகுறி கண்டறியப்பட்டு அவர்களை சோதனை செய்தபோது ஒமைக்ரானைவிட அதிக வேகமாகப் பரவும் தன்மைக் கொண்ட புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் திரிபு கண்டறியப்பட்டு உள்ளது. இது 46 முறை உருமாற்றம் அடைந்திருப்பதாகக் கூறும் மருத்துவர்கள் இந்த வைரஸின் தன்மைக் குறித்து மேலும் ஆய்வு செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் சீனாவின் வுகான் மாகாணத்தில் முதன் முதலாகக் கண்டறியப்பட்ட SARS-Covid-2 கொரோனா வைரஸ் அதற்குப் பிறகு மரபணு மற்றும் அதன் ஸ்பைக் புரத்தின் மாற்றங்களால் பல உருமாறிய கொரோனா வைரஸ்களை தோற்றுவித்தது. அதன்படி ஆல்பா, பீட்டா, காமா என்று கிரேக்க மொழி எழுத்துகளை விஞ்ஞானிகள் உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு பெயரும் சூட்டினர்.
இந்நிலையில் 50க்கும் மேற்பட்ட தடவை உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் தற்போது உலகம் முழுவதும் அதிகப் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் 46 முறை உருமாற்றம் அடைந்த புதிய வேரியண்ட் வைரஸ் பிரான்ஸ் நாட்டில் 12 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருப்பது விஞ்ஞானிகளிடம் புது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments