தமிழகத்தில் பரவிவரும் வீரியம் மிக்க புதிய கொரோனா வைரஸ்!!! நிலைமை மேலும் சிக்கலாகிறது!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனா வைரஸின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கான காரணத்தைத் தற்போது தமிழகச் சுகாதாரத் துறை வெளியிட்டு இருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் தமிழகத்தை தாக்கி வந்த கொரோனா வைரஸ்கள் ஏ1, ஏ2, ஏ3, பி1 வகையைச் சார்ந்தவை என்றும் தற்போது பரவி வரும் வைரஸ் இவற்றை விட மிகவும் வீரியம் மிக்கவை என்றும் தெரிய வந்துள்ளது. இந்த புதிய வகைக்கு க்ளேட்13 எனப் பெயரிடப்பட்டு இருக்கிறது. இவை மிகவும் தீவிரத் தன்மைக் கொண்டது என்றும் அதி விரைவிலேயே தீவிர நோயை உண்டுபண்ணக் கூடிய தன்மையுடையவை என்றும் கூறப்படுகின்றன.
புதிய க்ளேட் 13 வகை வைரஸ்களால் வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் அதிகம் பாதிக்கப் படும் அபாயம் இருப்பதாகவும் சுகாதாரத் துறை அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இதன் தாக்கம் தற்போது சென்னையில் அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தைத் தவிர தெலுங்கானா, ஆந்திரா போன்ற பகுதிகளிலும் இந்த வைரஸ் வகை அதிகமாக இருப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். தமிழகத்தின் இந்த வகை வைரஸ் மத்திய பிரதேசத்தில் இருந்து பரவி இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
புதிய வீரியம் மிக்க கொரோனா வைரஸ்க்கு தற்போது வேறு சிகிச்சைகள் கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு சுகாதார துறை தள்ளப்பட்டு இருக்கிறது. புதிய நோய்க் கட்டுப்பாட்டு மருந்துகள் குறித்த ஆய்வும் தற்போது முடுக்கிவிடப் பட்டு இருக்கிறது. கொரோனா வைரஸ் பரவிய ஆரம்பக் காலக்கட்டத்தில் இருந்தே இது ஒவ்வொரு பிராந்தியங்களிலும் வேறு வேறான தன்மையைக் கொண்டிருப்பதைக் குறித்து விஞ்ஞானிகள் சந்தேகத்தை எழுப்பி வந்தனர். அதன்படி கடந்த மாத்தில் இந்திய விஞ்ஞானிகள் புதிய 11 வகை கொரேனா வைரஸ்களைக் கண்டுபிடித்து வெளியிட்டனர். மேலும் அதன் மரபணுக்களிலும் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்த மாற்றங்களால் தடுப்பூசி கண்டுபிடிப்பதிலும் தாமதம் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments