கொரோனா விஷயத்தில் புது நம்பிக்கை: மனிதர்கள்மீது புது கொரோனா தடுப்பு மருந்து சோதனை!!!

  • IndiaGlitz, [Thursday,June 25 2020]

 

கொரோனா நோய்த்தொற்று அமெரிக்காவிற்கு மட்டுமல்ல உலகில் பல நாடுகளுக்கும் பெரும் தலைவலியாக மாறியிருக்கிறது. கட்டுப்படுத்த முடியால் பல அரசுகள் திண்டாடி வரும் நிலையில் கடைசி நம்பிக்கையாக கொரோனா தடுப்பு மருந்தை மட்டுமே உலக மக்கள் நம்பிக் கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் 120 க்கும் மேற்பட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் Sanofi, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், மாடர்னா நிறுவனம், Pfizer, சீனாவின் Ad5-NCov போன்றவை நம்பிக்கை அளிக்கும் விதத்தில் மனிதர்களின் மீது சோதனை செய்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரிட்டனை சார்ந்த இம்பீரியல் கல்லூரி புதிய அணுகுமுறையில் தயாரித்த கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்கள் மீது சோதித்து பார்க்க இருக்கிறது. பொதுவாக வைரஸ், பாக்டீரியா போன்ற நோய்த்தொற்றுக்கு மருந்து தயாரிக்கும்போது வலுகுறைக்கப்பட்ட வைரஸ் கிருமிகளைப் பயன்படுத்தி மருந்து தயாரிப்பார்கள். ஆனால் இம்பீரியல் பல்கலைக்கழகம் தற்போது செயற்கையாக தயாரிக்கப்பட்ட கொரோனா கிருமியை பயன்படுத்தி புது கொரோனா தடுப்பு மருந்தை தயாரித்து இருக்கிறது. இந்த மருந்து மனிதர்களின்மீது சோதிக்கப் படுவதற்கும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 300 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு சோதனை செய்யப்படும் என ஆய்வுக் குழுவின் தலைவர் ராபின் ஷயோக் தெரிவித்து உள்ளார்.

அடுத்தக்கட்டமாக வரும் அக்டோபரில் 6 ஆயிரம் பேரை தேர்வு செய்து அவர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட இருக்கிறது. சோதனையில் வெற்றிகரமான முடிவுகள் எட்டப்பட்டால் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இந்த மருந்து சந்தைக்கு வரும் எனவும் கூறப்படுகிறது. கொரோனா RNA வை பிரதியெடுத்து தயாரிக்கப்பட்ட புதிய கொரோனா தடுப்பு மருந்து உடலுக்குள் செலுத்தப்படும்போது அது பல்லாயிரக் கணக்காக பிரதியெடுப்பதை தடை செய்யும் விதத்தில் இது உருவாக்கப் பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் கொரோனா நோய் பற்றிய எச்சரிக்கையை மனித நோய் எதிர்ப்பு மண்டலங்களில் தூண்டி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தவும் இந்த தடுப்பு மருந்து உதவும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை அளித்து வருகின்றனர். இந்த மருந்தின் சோதனையில் வெற்றிப் பெற்றால் மருந்து தயாரிப்பது மிகவும் எளிதாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் கிருமிகளின் ஆற்றலை அளித்து உருவாக்கப்படும் தடுப்பு மருந்தை விட செயற்கையாக தயாரிக்கப்பட்ட RNA மூலம் குறைந்த நேரத்தில் அதிக தடுப்பூசிகளை தயாரிக்க முடியும் எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். குறைந்தது 1 லிட்டர் RNA குறியீட்டில் இருந்து சுமார் 20 லட்சம் தடுப்பூசிகளைத் தயார் செய்யலாம் என பிபிசி செய்தி ஒன்று சுட்டிக்காட்டி உள்ளதும் குறிப்பிடத் தக்கது.

More News

முன்னாள் கணவரின் மனைவியை சீண்டிய ரசிகரை வெளுத்து வாங்கிய காஜல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராகிய காஜல் பசுபதி ஒரு சில தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே. இவர் நடன இயக்குனர் சாண்டியை கடந்த 2008 ஆம் ஆண்டு திருமணம்

97 பேரின் உயிரைக் குடித்த பாகிஸ்தான் விமானம் இதனால்தான் வெடித்தது!!! வெளியான அதிர்ச்சி தகவல்!!!!

பாகிஸ்தான் கராச்சி நகரில் கடந்த மாதம் கனத்த ஓசையுடன் அரசுக்குச் சொந்தமான விமானம் ஒன்று வெடித்து சிதறியது.

புதுவீட்டில் குடிபெயர்ந்த 20 நாட்களில் 3 பேர் மரணம்: லண்டன் இந்திய குடும்பத்தின் சோகம்

லண்டனில் வாழும் இந்திய குடும்பத்தினர் புதிய வீட்டில் குடிபெயர்ந்த 20 நாட்களில் அந்த வீட்டில் இருந்த நீச்சல் குளத்தில் தவறுதலாக விழுந்து 3 பேர் பரிதாபமாக மரணம் அடைந்த சம்பவம் பெரும்

விமானத்தில் தூங்கியபோது ரசிகரின் செயலால் அதிர்ச்சி அடைந்த ராதிகா ஆப்தே

லண்டனில் தான் விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது ரசிகர் ஒருவரின் செயலால்தான் அதிர்ச்சி அடைந்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தின் நாயகி ராதிகா ஆப்தே

12 ஆண்டுகள் கழித்து 'எந்திரன்' பட ரகசியத்தை வெளியிட்ட ஒளிப்பதிவாளர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் உருவான 'எந்திரன்' திரைப்படம் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.