25 ஆக அதிகரித்த புதியவகை கொரோனா பாதிப்பு… தடுப்பூசி குறித்து எழுந்த சந்தேகம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
இன்னும் சில தினங்களில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டு வரும் என எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்து இருந்தார். இதை உறுதிப்படுத்தும் விமதாக இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான இறுதி கட்ட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன என்று பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். இந்நிலையில் இங்கிலாந்தில் இருந்து உருமாறி தற்போது உலகில் பீதியை கிளப்பி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் இந்தியாவிலும் 25 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தி விட்டதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.
நேற்றுவரை 20 ஆக இருந்த புதியவகை கொரோனா வைரஸ் பாதிப்பு இன்று புதிதாக டெல்லியில் ஒருவருக்கு மற்றும் பூனேவில் 4 பேருக்கும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்திலும் ஒருவருக்கு புதியவகை கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்று தமிழகச் சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறி இருந்தார். அந்த எண்ணிக்கை இந்தியா முழுவதும் தற்போது 25 ஆக அதிகரித்து இருக்கிறது.
இங்கிலாந்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொரேனா வைரஸின் மரபணு உருமாறி விட்டதாகவும் இதனால் ஏற்படும் பாதிப்பு மற்ற வகைகளைவிட 70% அதிகமாக இருப்பதாகவும் கூறப்பட்டது. VuI-202012/01 எனும் பெயரிடப்பட்டு உள்ள இந்தப் பாதிப்பினால் தற்போது பல உலக நாடுகளில் மீண்டும் இரண்டாம் அலை வீசலாம் என்ற அச்சமும் எழுந்திருக்கிறது. இந்நிலையில் கொரோனா வைரஸின் நோய் எதிர்ப்பு அழுத்தம் காரணமாக இந்த வேறுபாடுகள் ஏற்படுகின்றன என்றும் இந்த நோய் எதிர்ப்பு அழுத்தம் சுற்றுச்சூழல், ஹோஸ்ட் சிகிச்சை அல்லது பிற முறைகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
இந்தப் புதியவகை கொரோனா வைரஸினால் தற்போது உலகம் முழுவதும் பயன்பாட்டுக்கு வந்திருக்கும் கொரோனா தடுப்பூசி செயல்திறனில் எந்த மாற்றமும் ஏற்படாது என்றே விஞ்ஞானிகள் கூறி உள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments