தமிழகத்தில் 6- ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு....!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், சுமார் 5,755 நபர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பது கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. நேற்று ஒரு நாளில் மட்டும் ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 406 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்த நிலையில், அதில் 5,755 நபர்களுக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24 லட்சத்து 55 ஆயிரத்து 332 ஆக உயர்ந்துள்ளது.
8,132 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 23 லட்சத்து 75 ஆயிரத்து 963-ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பலனளிக்காமல் 150 நபர்கள் நேற்று ஒரே நாளில் உயிரிழக்க, பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 32,051 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் - 350 பேர்
உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை - 11 பேர்
சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்கள் - 245 பேர்
ஈரோடு - 597 பேர்
திருப்பூர் - 361 பேர்
சேலம் - 398 பேர்
கோவை - 698 பேர்
பெரம்பலூர் - 33 பேர்
ராமநாதபுரம் - 35 பேர்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Bala Vignesh
Contact at support@indiaglitz.com
Comments