இந்திய எல்லைப் பகுதிகளில் நிலவும் புதிய சர்ச்சை??? உலகப் போருக்கான அறிகுறியா இது??? பரபரப்பை ஏற்படுத்தும் அரசியல் காரணம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவில் கொரோனா ஒருபக்கம் கடும் அழிவுகளை ஏற்படுத்தி வரும் வேளையில், இன்னொரு பக்கம் இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் சீன அரசு இராணுவ வீரர்களை குவித்து வருகிறது. இதற்கு பின்னால் உலக அரசியல் காரணங்கள் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி இருக்கின்றனர். இந்நிலையில் சீன அரசாங்கம் எவ்வளவு இராணுவ வீரர்களை குவித்தார்களோ அதே அளவிற்கு இந்தியாவும் தற்போது இராணுவ வீரர்களை வரிசைக் கட்டி நிறுத்தி வைத்திருக்கிறது.
சீனா விவாரகம் இந்தியாவிற்கு நெருக்கடியை ஏற்படுத்தி இந்த நேரத்தில், இன்னொரு பக்கம் பாமாயில் ஒப்பந்தத்தில் சர்ச்சை கிளம்பி வெறுப்பு தெரிவித்து வந்த மலேசியா, தற்போது நட்பு பாராட்டி வருகிறது. இது எப்படி நடந்தது? இதிலும் சில சர்வதேச அரசியல் காரணங்கள் இருக்கத்தான் செய்கிறது. நிலைமை இவ்வாறிருக்க தற்போது நோபாளம் இந்திய இராணுவத்துடன் கடுமையான வார்த்தைப் போரைத் தொடங்கி இருக்கிறது. எல்லைப் பகுதியில் இந்தியா, சீனா, மற்றும் நோபாளத்தை இணைக்கும் இடமாக இருந்துவரும் லிபு லேக் பகுதியில் இந்திய அரசு கடந்த மே 8 ஆம் தேதி சாலையை அமைத்தது. லிபு லேக் பகுதியை சுற்றியுள்ள இடங்கள் பல ஆண்டுகாலமாக இந்தியாவின் வசம் இருந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இவ்வளவு நாள் இந்த பகுதிக்குச் சொந்தம் கொண்டாடாத நேபாளம் தற்போது அந்த பகுதிக்கு சொந்தம் கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல் போர் வருவதற்கான அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. சிறிய நாடான நேபாளம் திடீரென்று இத்தனை ஆக்ரோஷமாக நடந்து கொள்வதற்கான காரணத்தைக் குறித்து அரசியல் விமர்சகர்கள் தற்போது விவாதத்தில் ஈடுபட ஆரம்பித்து விட்டனர்.
பொருளாதாரம், நிதி, இராணுவம் என பல வகைகளிலும் நேபாளத்திற்கு உதவி வரும் நாடாக சீனா இருந்து வருகிறது. தற்போது சீனாவுக்கும் ஆதரவு அளிக்கும் நோக்கில் நோபாளம் இந்தியா மீது காட்டம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள இந்திய இராணுவ ஜெனரல் எம்எம் நாரவனே “நோபாளத்தின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு பின்னால் மூன்றாவது கை ஒன்று இருக்கிறது. இந்த சதியை முறியடிப்போம்” எனக் கடந்த வாரத்தில் செய்தியாளர்களிடம் பேசியிருந்தார். இந்தக் கருத்தையும் நோபளத்தின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஈஷ்வர் பொக்ரியால் அரசியலாக்கி விட்டார்.
“இந்திய இராணுவம் நோபாளத்தை அவமானப் படுத்தி விட்டது. இந்திய விடுதலைப் போரில் எங்களின் தியாகத்தை உணர்ந்து கொள்ளாமல் எங்கள் செயலுக்குப் பின்னால் மூன்றாவது கை இருப்பதாக கூறியிருக்கிறது. இது மிகவும் அவமான செயல் என்றும் நேபாளத்தை இந்தியா புண்படுத்தி விட்டது’‘ என்றும் நேரடியான வார்த்தைப் போரை அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் தொடங்கியிருக்கிறார். இந்தியாவின் கிழக்கில் இப்படி நெருக்கடி நிலவுகிறது என்றால் வடக்கில் மே மாதம் தொடக்கம் முதலே பாகிஸ்தான் இராணுவம் துப்பாக்கிச் சூடில் ஈடுபட்டு வருகிறது. உண்மையில் ஏன் இந்தியாவின் எல்லைகளில் திடீரென்று இத்தனை மாற்றம் என்ற கேள்வி எழலாம்.
கொரோனா பரவல் நேரத்தில் சர்வதேச அரசியலும் இதைச் சுற்றியே நகரத்தொடங்கி விட்டது. கொரோனா பரவலுக்கு சீனாவின் ஆய்வகம் தான் காரணம் என உலக அரங்கில் குற்றம் சாட்டியது ஒரு நாடு அமெரிக்கா என்றுதான் இதுநாள் வரை நாம் எல்லாம் கருதி வந்திருக்கிறோம். அமெரிக்காவிற்கு முன்பே இந்த வேலையை திபெத் செய்திருக்கிறது. திபெத் என்ற தீவு நாட்டிற்கு இன்றுவரை ஐ.நா. சபையில் ஒரு நாடு என்ற அந்தஸ்து வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதைத்தவிர திபெத்தை உலகச் சுகாதார அமைப்பும் ஒரு நாடாக கணக்கில் வைத்துக் கொள்வதில்லை. இன்றுவரை திபெத் சீனாவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக பல உலக நாடுகள் கருதிக்கொண்டிருக்கின்றன. உண்மை நிலவரமும் அப்படித்தான். சர்வதேச அரசியலில் திபெத் பங்கு கொள்ளாதவாறு சீனா மிகவும் ஜாக்கிரதையாக காய் நகர்த்தி வருவதும் உண்மைதான் என்றே சர்வதேச அரசியல் நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய எல்லை விவகாரத்திற்கு எதற்கு திபெத் பற்றிய பேச்சு என்ற கேள்வி எழலாம். கொரோனா வைரஸ் பரவலைப் பற்றியும் மனிதர்களிடம் இருந்து மற்ற மனிதர்களுக்கு பரவும் அபாயம் இருக்கிறது என்றும் முதன் முதலாக WHO விற்கு அறிக்கை அளித்த நாடு திபெத் தான். அதைத்தவிர தனது அறிக்கையில் தொடர்ந்து சீனாவின் வுஹான் வைரஸ் என்றே திபெத் குறிப்பிட்டு இருக்கிறது. இந்த விவாரத்தில், அமெரிக்கா சீனா மீது இருக்கும் வெறுப்பை வலுப்படுத்த தற்போது திபெத்தை ஒரு பெரும் வாய்ப்பாக பயன்படுத்த ஆரம்பித்து விட்டது என்றே அரசியல் வல்லுநர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
சீனாவிற்கு எதிராக திபெத்துக்கு ஆதரவளிக்க முடிவெடுத்து இருக்கிறது அமெக்கா. உலக அளவில் 90 க்கும் மேற்பட்ட நாடுகள் உலகச் சுகாதார அமைப்பின் உறுப்பு நாடாக திபெத்தை அங்கீகரிக்க வேண்டும் என ஆதரவு குரல் எழுப்பியிருக்கின்றனர். இந்த ஆதரவு குழுவுக்கு தலைமை வகித்து இருப்பதும் அமெரிக்காதான். இப்படி உருவான சர்வதேச அரசியல் நிலைமையில் தற்போது இந்தியாவும் ஒரு முக்கிய புள்ளியாக மாற்றப்பட்டு விட்டதுதான் இன்னும் சுவாரசியம். உலகச் சுகாதர அமைப்பின் நிரந்தர உறுப்பினராக கடந்த வாரம் இந்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தே பொறுப்பு ஏற்றுக் கொண்டார். பொறுப்பு ஏற்றுக் கொண்டவுடன் திபெத்துக்கு ஆதரவாகப் பேசவும் செய்தார்.
தற்போது திபெத்துக்கு இந்தியா ஆதரவு தெரிவித்து பேசுவதுதான் சீனாவின் கண்களை உறுத்தி இருக்கிறது. சீனாவும், சீனாவிற்கு ஆதரவாக இருக்கும் நோபளமும் எல்லைப் பகுதியில் தலைவலியை கொடுக்க ஆரம்பித்து விட்டன. கிழக்கின் நிலைமை இப்படி இருக்கிறது என்றால் பாகிஸ்தானுக்கு நெடுங்காலமாக சீனாதான் நட்பு நாடாக இருந்தது வருகிறது. பல்வேறு வகைகளில் சீனா அதன் பொருளாதார தேவைகளை நிறைவேற்றி வருகிறது. இந்தக் காரணங்களை வைத்துக்கொண்டு சீனாவிற்கு ஆதரவாக பாகிஸ்தான் இராணுவம் செயல்படுகிறதோ என்ற சந்தேகமும் எழுப்பப் பட்டு வருகிறது. இன்னொரு வகையில் சீனாவிற்கு எதிரியாக இருந்து வரும் மலேசியா தற்போது இந்தியாவிற்கு நட்பாகவும் மாறியிருப்பது ஒருவகையில் மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கும் விஷயமாகப் பார்க்கப் பட்டு வருகிறது.
கொரோனா ஒருபக்கம் மக்களை பாடாய் படுத்தி வரும் வேளையில் இன்னொரு பக்கம் உலகின் இரு வல்லரசுகள் மோதிக் கொள்ள ஆரம்பித்து இருக்கின்றன. எங்கோ ஒரு மூலையில் இருக்கும் இரு நாடுகளிடையே பனிப் போர் என்று நாம் அதைச் சாதாரணமாக நினைத்து விடுகிறோம். ஆனால் உண்மை நிலவரம் என்னவோ வேறாக இருக்கிறது. பனிப்போர் என்றாலும் இரு நாடுகள் மோதிக் கொள்ளும் போது உலக வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப் படும் அபாயம் இருப்பதாகவும் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். பொருளாதாரம், வர்த்தகம், நிதி நிலைமை, கச்சா எண்ணெய் இது படிப்படியாக பூதமாக மாறுவதற்கும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரங்களைப் பார்க்கும்போது கொரோனா நோய்த்தொற்று மட்டுமல்ல, உலக அரசுகளையே அசைத்துப் பார்க்கும் பெரும் பூதம் என்றே சொல்லத் தோன்றுகிறது.
Dec. 31 -- that's the same day Taiwan first tried to warn WHO of human-human transmission. Chinese authorities meanwhile silenced doctors and refused to admit human-human transmission until Jan. 20, with catastrophic consequences. #CovidCoverup #ChinaTransparencyNow pic.twitter.com/dGYF0zpiqU
— Morgan Ortagus (@statedeptspox) March 23, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com