சாதி வாரியான கணக்கெடுப்புக்கு புதிய ஆணையம்… பயன்பாடுகள் குறித்து விளக்கம் அளித்த தமிழக அரசு!!!

 

தமிழகத்தில் சாதி வாரியான கணக்கெடுப்பை நடத்தி அதன் அறிக்கைகளை சமர்ப்பிக்க ஓய்வுப் பெற்ற நீதிபதி தலைமையில் புதிய ஆணையம் அமைக்கப்படும் எனத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இந்த அறிவிப்பு வெளியான சில தினங்களில் ஓய்வு பெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் புதிய ஆணையம் ஏற்படுத்தப்பட்டது. தற்போது இந்த ஆணையத்தின் பயன்பாடுகள் குறித்து தமிழக அரசு சார்பில் விரிவான விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

அதில், இப்போது தமிழகத்தில் வழங்கப்பட்டு வரும் சலுகையானது கடந்த 1931 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளி விவரங்கள் அடிப்படையிலேயே வழங்கப்பட்டு வருகிறது. இந்த 90 ஆண்டுகளில் மக்கள் தொகை பெருக்கம், இடப்பெயர்வு போன்ற பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கும். பட்டியல் இனத்தவர்கள் மற்றும் பிற்படுத்தப் பட்டவர்களின் இடஒதுக்கீடு என்பது சமூக நீதிக்கான அடிப்படை என்ற கோட்பாட்டை கொண்டு இயங்கும் இந்த அரசு தற்போதைய சாதிய ரீதியான விகிதத்திற்கு ஏற்ப சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்திலேயே முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இந்த ஆணையத்தை அமைக்க உத்தரவிட்டு உள்ளார்.

பல்வேறு சாதிய அமைப்புகள் மற்றும் கட்சிகள் அவரவர் சமூக மக்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு கோரி வரும் நிலையில் அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் நியாயமா என்பது இந்த ஆணையம் வழங்கும் இறுதி அறிக்கையில் தெரியவரும். மேலும் தனியார் நிறுவனங்கள் சமீபத்தில் நடத்திய ஆய்வு முடிவுகளின்படி, தமிழகத்தில் பட்டியல் இனத்தவர்களின் ஜனத்தொகை கடந்த சில ஆண்டுகளில் பெருகி வந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில் புதிய ஆய்வுகள் யாருக்கு சாதகமாக அமையும் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.

அரசின் சலுகைகள் சரியான அதே சமயம் தேவையான மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் இந்த ஆணையத்தை அமைத்துள்ளார் முதல்வர். இதனால் தமிழகத்தில் பின்பற்றப்படும் 69% இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்த முடியும். உச்சநீதிமன்றம் இடஒதுக்கீட்டு வழக்குகளில் அவ்வப்போது ஜாதி ரீதியிலான பிரதிநிதித்துவத்தை நியாயப்படுத்தும் வகையில் கணக்கெடுப்புகளை கேட்டு வருகிறது. இந்த ஆணையத்தின் மூலம் உச்சநீதி மன்றத்தில் இடஒதுக்கீட்டு வழக்கில் தமிழகத்தில் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு முறையை உறுதிப்படுத்த முடியும்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி பிரத்யேக ஆணையம் அமைக்கப்படும் என்று அறிவித்தபின் ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி குலசேகரனை நியமித்து உத்தவிட்டு உள்ளார். இதன்மூலம் ஆணையத்தின் செயல்பாடுகள் துவங்கப் பெற்று விரைவில் கணக்கெடுப்பு பணியும் துவங்கும்.

தற்போதைய நிலவரப்படி சாதி வாரியாக அளவிடக்கூடிய முழுமையான புள்ளி விவரங்களை சேகரிக்கும் வழி முறைகளை முடிவு செய்து அப்புள்ளி விவரங்களை திரட்டி அரசுக்கு அறிக்கையாக சமர்பிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

தனுஷ் படத்தில் பாடல் பாடிய தந்தை நடிகர்!

தனுஷ் நடித்த படத்தில் தந்தையாக நடித்த நடிகர் ஒருவர் தற்போது தனுஷ் நடித்து வரும் திரைப்படத்திற்கு பாடல் ஒன்றை பாடியுள்ளார்

வேட்டியை மடிச்சி விட்டு நிவாரணப் பணியில் இறங்கிய எடப்பாடியார்!!!

தமிழகத்தில் நிவர், புரெவி எனும் இரண்டு புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை தமிழக அரசு விரைந்து சரிசெய்து வருகிறது.

முகநூல் மூலம் காதல் வலை: 6 பெண்களை திருமணம் செய்த ஐடி ஊழியர் கைது!

முகநூல் மூலம் காதல் வலை வீசி 6 பெண்களை திருமணம் செய்த ஐடி ஊழியர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

தற்கொலை செய்து கொண்ட விஜே சித்ராவின் கடைசி வீடியோ!

'பாண்டியன் ஸ்டோர்ஸ்' உள்பட பல தொலைக்காட்சி சீரியலில் நடித்த விஜே சித்ரா திடீரென இன்று அதிகாலை தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சின்ன திரையுலகினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் நடிகை தூக்கில் தொங்கி தற்கொலை!

கடந்த சில ஆண்டுகளாக மன அழுத்தம் காரணமாகவும், காதல் தோல்வி உள்பட ஒருசில காரணங்களாலும் சின்னத்திரை மற்றும் பெரிய திரை நடிகர், நடிகைகள் சிலர் தற்கொலை செய்து வருகின்றனர்.