தம்பதியின் தவறான முடிவு....! பரிதாபமாக உயிரிழந்த பச்சிளம் குழந்தை....!
Send us your feedback to audioarticles@vaarta.com
பெற்றோர்கள் கட்டைப்பையில் வைத்து குழந்தையை எடுத்துச் சென்றதில், மூச்சுத்திணறல் காரணமாக பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சண்முகம் என்பவர் கடந்த 30 வருடங்களுக்கு முன்பு திருநெல்வேலியில் இருந்து, திருப்பூருக்கு குடிபெயர்ந்துள்ளார். தனியார் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வரும் இவர், உடுமலையை சேர்ந்த தனலட்சுமி என்பவரை சென்ற 2016-இல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு பெண்குழந்தை உட்பட, ஒரு ஆண்குழந்தை உள்ளது. மீண்டும் கர்ப்பமான தனலட்சுமிக்கு கடந்த 12-ஆம் தேதி, பல்லடம் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்த பெண் குழந்தைக்கு ரத்தம் குறைவாக உள்ள காரணத்தால், திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர். ஆனால் அதற்குப்பின் அங்கிருந்து அவசர அவசரமாக, துணிகள் நிரம்பிய கட்டைப்பையுடன் வீட்டிக்கு வந்துள்ளனர் சண்முகமும், தனலட்சுமியும். கட்டைப்பையில் துணிகளுக்கு இடையில் குழந்தையை வைத்து எடுத்து வந்ததில், பச்சிளம் பிஞ்சு பரிதமாக உயிரிழந்துள்ளது. இதையடுத்து காளிவேலம்பட்டி பிரிவு அருகே குழியைத்தோண்டி யாருக்கும் தெரியாமல், குழந்தையை புதைத்து விட்டனர்.
இதற்கிடையே தனலட்சுமி இல்லாததை பார்த்த மருத்துவர்கள், பல்லடம் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் மூலம் அவர் வீட்டிற்கு சென்று விசாரித்துள்ளனர். அப்போது தனலட்சுமி மருத்துவமனை பிடிக்காததால் தாங்கள் அங்கிருந்து கிளம்பியதாகவும், மேலும் நடந்த சம்பவங்களை செவிலியரிடம் கூறியுள்ளார். இதன்பின்பு சிகிச்சைக்காக அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
இதைத்தொடர்ந்து பல்லடம் வட்டாட்சியர் தேவராஜ் அவர்களின் தலைமையிலான, மருத்துவக்குழு குழந்தையை தோண்டி எடுத்து, பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பெண் சிசு கொலை நடந்ததா அல்லது வேறு ஏதாவது பிரச்சனை குழந்தைக்கு இருந்ததா என்ற கோணத்தில் வழக்குப்பதிவு செய்து, பல்லடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout