ஆம்பூர் காவலர்கள் உற்சாகமாக வேலை செய்ய புதிய முயற்சி...!

  • IndiaGlitz, [Wednesday,April 14 2021]

கோடை வெயிலை தாக்குபிடிக்க முடியாத காரணத்தால், போக்குவரத்து காவலர்களுக்கு குளிர்ச்சி உணவுப்பொருட்களை வழங்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொடுமையாக உள்ளது. மக்கள் வெளியில் வருவதை தவிர்த்தாலும், அவர்களின் நன்மைக்காக பணியாற்றி வரும் போக்குவரத்து காவலர்களின் நிலை படுமோசமாக உள்ளது.

கொரோனா மற்றும் வெயிலின் தாக்கம் இரண்டாலும் போக்குவரத்து காவலர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். காலை வேலையில் சுறுசுறுப்புடன் இயல்பாக பணியில் இருக்கும் காவலர்கள், வெயிலினால் மிகவும் சோர்வடைந்துள்ளனர். அதிலும் குறிப்பாக பெண் காவலர்கள், வயது முதிர்ந்த காவலர்கள், சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

இந்த காரணங்களால் வெயிலை தணிக்கவும், காவலர்கள் சுறுசுறுப்புடன் பணியாற்றவும், அவர்களை உற்சாகப்படுத்தவும் திருப்பத்தூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். போக்குவரத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு தினமும் 3 வேளையும் மோர், எலுமிச்சை சாறு, தர்பூசணி மற்றும் வெள்ளரி உள்ளிட்ட குளிர்ச்சியான உணவு பதார்த்தங்களை வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து ஆம்பூர் போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் லட்சுமணன், ஆம்பூர் புறவழிச் சாலை அருகே உள்ள காவலர்களுக்கு மோர் உள்ளிட்ட குளிர்பானங்களை வழங்கினார். இதேபோல் திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் போக்குவரத்துப் பணியில் உள்ள காவலர்கள், சுங்கச்சாவடியில் கண்காணிப்பில் ஈடுபடும் காவலர்கள் மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு குளிர்ச்சி உணவுப்பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை அதிகாரிகள் சார்பாக கூறப்பட்டது.

More News

சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் தள்ளிவைக்கப்படுகிறதா...! டெல்லி முதல்வர் கடிதம்....!

கொரோனா தீவிரமாகி வருவதால், சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகளை தள்ளிவைக்க பேச்சுவார்த்தை நடந்துவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

'குக் வித் கோமாளி' கிராண்ட் ஃபினாலே: ஷிவாங்கி பதிவு செய்த உருக்கமான டுவீட்

கடந்த சில மாதங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த 'குக் வித் கோமாளி' என்ற நிகழ்ச்சி இன்றுடன் முடிவடைகிறது. இன்று மதியம் 2 மணிக்கு 5 மணி நேர நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது

'அந்நியன்' படத்தின் இந்தி ரீமேக்: முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஷங்கர்!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான 'அந்நியன்' திரைப்படம் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே

கும்பமேளா திருவிழாவில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள்: காற்றில் பறக்கவிடப்பட்ட கொரோனா விதிமுறைகள்!

இந்துக்களின் புனித நிகழ்வுகளில் ஒன்றான கும்பமேளாவில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கங்கை நதியில் குளிப்பது உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதால் கொரோனா தொற்று

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் செந்திலின் வீடியோ வைரல்!

காமெடி நடிகர் செந்தில் சமீபத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்