புது வரவு ஹுண்டாய் வெர்னா!!! எப்படியிருக்கும்???
Send us your feedback to audioarticles@vaarta.com
டீசல் கார்களில் முன்னிலையில் இருக்கும் ஹோண்டாய் நிறுவனம் தற்போது தனது வரவை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த புது வரவு ஸ்டைலான டிசைன், புத்தம் புதிய இன்ஜின், கியர் பாக்ஸ், அதிக வசதிகள் என்று வாடிக்கையாளர்களிடம் ஒரு கலக்கு கலக்கும் எனவும் இந்நிறுவனம் எதிர்ப்பார்க்கிறது. நம் இந்தியாவில் வெர்னா என்ற பெயரில் விற்கப்படும் கார்கள்தான் ரஷ்யாவில் Solaris என்ற பெயரில் கிடைக்கின்றன. காரின் முன்பக்கத்தில் இருக்கும் க்ரோம் Cascading காருக்கு ஒரு புத்துணர்ச்சியான வடிவத்தைக் கொடுக்கிறது. முன்பக்கத்தில் இருக்கும் ஏர் இன்டேக்குக்கு ஒரு அலுமினிய ஃபினிஷை கொடுத்திருக்கிறார்கள்.
மேலும், LED ஹெட்லைட்ஸ் ரொம்பவும் ஸ்டைலாக இருக்கிறது. 1.0 லிட்டர் T.GDi இன்ஜின் மற்றும் மாடலின் கிரில், பின்பக்க பம்பர், Dual Exhaust Tip போன்றவை இதன் சிறப்பம்சமாக இருக்கிறது. காரின் உள்பக்கத்தில் உள்ள டச் ஸ்கீரின் மற்ற கார்களை விட 9 இன்ச்சாக அதிகப்படுத்தப்பட்டு இருக்கிறது. மேலும் 4.2 இன்ச் கொண்ட MID தேவையான அனைத்துத் தரவுகளை சேமித்துக்கொள்ளும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கிறது. டேஷ்போர்டுகள் புதிய Faux Wood ஆல் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்தக் காரில் ஃபினிஷிங் மிகவும் தரமானவையாக இருக்கின்றன. T.GDi இன்ஜின் கொண்ட வேரியன்ட்டின் கேபின், சிவப்பு வேலைப்பாடுகளுடன் கறுப்பு நிறத்திலும் கிடைக்கின்றன.
இதைத்தவிர வெர்னாவின் டாப் வேரியன்ட்களில் ப்ளூலிங்க் கனெக்ட்டிவிட்டி உடனான 8 இன்ச் இன்ஃபோ டெயின்மென்ட் சிஸ்டன், ஸ்மார்ட் வாட்ச் மற்றும் மொபைல் ஆப், சன்ரூஃப், ரியர் ஏசி வென்ட் எனப் பல வசதிகள் இருக்கின்றன. 2 காற்றுப்பைகள், ஏபிஎஸ் –EBD, ISOFIX பின்பக்க கார் பார்க்கிங் சென்சார், முன்பக்க சீட்பெல்ட் ரிமைண்டர் போன்ற பாதுகாப்பு வசதிகளுக்கும் பஞ்சமில்லை. 115bhp பவர் -14,7km டார்க் மைலேஜ் ஆகியவற்றை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் NA பெட்ரோல் இன்ஜின் மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் போன்றவையும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த கார் ஹுண்டாயின் மற்ற கார்களை விட நல்ல மைலேஜ் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. தற்போது வரை BS-6 டீசல் இன்ஜின் கொண்ட ஒரே கார் வெர்னாதான் எனவே இதன் விறப்னை சூடுபிடிக்கும் எனவும் கருதப்படுகிறது.
மேலும் கறுப்பு, சிவப்பு, வெள்ளை, சில்வர், கிரே, ஸ்டேரி நைட் போன்ற 6 நிறங்களில் இந்த கார் கிடைக்கிறது என்பதும் கூடுதல் தகவல். 11 வேரியன்ட்கள் – 5 விதமான இன்ஜின் – கியர்பாக்ஸ் என்ற வரிசையில் இந்த கார் 9.31 லட்சத்தில் இருந்து – 13.99 லட்ச ரூபாய்க்கு இந்திய ஷோரூம்களில் கிடைக்கப்பெறுகிறது. இது முந்தைய வரவான ஹோண்டா சிட்டியைவிட குறைவு. மொத்தமாகப் பார்க்கும் போது ஸ்டைல் டிசைன் அதிகபடியான சிறப்பு வசதிகள், சிறப்பான BS-6 டீசல் இன்ஜின் போன்றவை முன்பைவிட ஆல்ரவுண்டர் என்ற அடிப்படையில் வாடிக்கையாளர்கள் இது கவரும் என எதிர்ப்பார்க்கலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Kiara Nithya
Contact at support@indiaglitz.com
Comments