"செல்பி எடுத்து அனுப்பினாலோ போதும்" !!! கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக புதிய செயலி!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காகப் பல்வேறு உக்திகளைக் கையாண்டு வருகிறது. வீட்டுச்சுவர்களில் நோட்டீஸ் ஒட்டுதல், பாதிப்பு அதிகமாக உள்ள பகுதிகளைத் தனிமைப்படுத்தல், இலவச தொலைத்தொடர்பு வசதி எனக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது கொரோனா அறிகுறி இருப்பவர்கள், எளிமையாக சுகாதாரத் துறையை அணுகும் வகையில் ஒரு புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த, கொரோனா பாதுகாப்பு செயலியை ஆப்பிள் தவிர மற்ற அனைத்து ஆண்ட்ராய்டு போன்களிலும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். எளிமையாப் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத் தக்கது. டெல்லி மாநாட்டிற்கு தமிழகத்தில் இருந்து அதிகம் பேர் கலந்துகொண்ட நிலையில் அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. பலரது தகவல்களை இன்னும் கண்டுபிடிக்க முடியாத நிலைமையும் தொடருகிறது. இதுபோன்ற தருணங்களில் இந்த செயலி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து இருக்கிறது.
சளி, காய்ச்சல், சுவாசக்கோளாறு போன்ற கொரோனா நோய்த்தொற்றுக்கான அறிகள் இருப்பவர்கள் தங்களை ஒரு செல்பி எடுத்து அனுப்பினாலே போதுமானது. செல்பி அனுப்பப்பட்டவுடன் அவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு உடனடியாக, அவரது இருப்பிடத்தை சுகாதாரத்துறை பணியாளர்கள் சென்று அடைவார்கள். நோளிகளை எளிமையாக கண்டுபிடிப்பதற்கு இந்த புதிய செயலி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் சுகாதாரத்துறை குறிப்பிட்டு இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com