ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய 20 ரூபாய் நோட்! பழைய பணம் செல்லுமா?

  • IndiaGlitz, [Saturday,April 27 2019]

ரிசர்வ் வங்கி ஏற்கனவே, ரூ.2000 ,ரூ. 500 , ரூ.200 , ரூ.100 , ரூ.50 , ரூ.10 ஆகிய புதிய பணங்களை அறிமுகம் செய்துள்ள நிலையில், தற்போது பச்சையும், மஞ்சளும் கலந்த நிறத்தில் புதிய 20 ரூபாய் நோட்டை வெளியிட உள்ளது.

இந்த புதிய 20 ரூபாய் நோட்டின் பின் புறத்தில், நாட்டின் கலாசார பாரம்பரியத்தை விவரிக்கும் வகையில், எல்லோரா குகைகள் அச்சிடப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய 20 ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய ரூபாய் தாள் மஞ்சள், பச்சை நிறங்களில் உருவாக்கப்படுகிறது. ஏற்கனவே புழக்கத்தில் உள்ள அனைத்து 20 ரூபாய் நோட்டுகளும் செல்லுபடியாகும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.