'நெற்றிக்கண்' இயக்குனரின் அடுத்த படத்தில் பிரபல ஹீரோ!

  • IndiaGlitz, [Tuesday,October 05 2021]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ’நெற்றிக்கண்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் இந்தப் படம் விமர்சகர்களால் கலவையாக விமர்சனம் செய்யப்பட்டாலும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தை இயக்கிய மிலந்த் ராவ், தற்போது அடுத்த படத்திற்கு தயாராகி விட்டார். இயக்குனர் மிலந்த் ராவ் இயக்க இருக்கும் அடுத்த திரைப்படம் வெப்சீரீஸ் ஆக உருவாகவிருப்பதாகவும், இந்த வெப்சீரீஸில் ஆர்யா முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த வெப்சீரீஸ் விரைவில் அமேசான் தளத்தில் ரிலீஸ் ஆகவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ஆங்கில நாவல் ஒன்றின் அடிப்படையில் இந்த இந்த வெப்சீரிஸ் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த வெப்சீரீஸில் ஆர்யா ஜோடியாக வாணிபோஜன் நடிப்பார் என்பதும் பசுபதி முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்த வெப்சீரிஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.