'நெற்றிக்கண்' இயக்குனரின் அடுத்த படத்தில் சமீபத்தில் ஹிட் கொடுத்த ஹீரோ!

  • IndiaGlitz, [Sunday,August 01 2021]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ’நெற்றிக்கண்’ திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது என்பதும் டிரைலருக்கு பின் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படம் ஆகஸ்ட் 13-ஆம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் ’நெற்றிக்கண்’ திரைப்படத்தை இயக்கிய மிலிந்த் ராவ், அடுத்த படத்திற்கு தயாராகி விட்டார். இவர் அமேசான் பிரைம் ஓடிடிக்காக ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளதாகவும் அந்த படத்தில் முக்கிய கேரக்டரில் சமீபத்தில் ’சார்பட்டா பரம்பரை’ என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த ஆர்யா நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

இந்த படமும் ’நெற்றிக்கண்’ போலவே திரில்லர் கதையம்சம் கொண்ட படம் என்றும் விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தில் ஆர்யாவுடன் நடிக்கும் நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.