நயன்தாராவுக்காக ரஜினியிடம் அனுமதி பெற்ற விக்னேஷ் சிவன்!
Send us your feedback to audioarticles@vaarta.com
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் தனது தயாரிப்பு நிறுவனமான ‘ரெளடி பிக்சர்ஸ்’ என்ற நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கவிருக்கும் திரைப்படத்தில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தை மிலண்ட் ராவ் என்ற இயக்குனர் இயக்க உள்ளார்.
இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. ’நெற்றிக்கண்’ என்பதே இந்த படத்தின் டைட்டில் என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்து டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். இதே டைட்டிலில் கடந்த ஆண்டு 1981ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் ஒரு படம் வெளிவந்தது என்பதும் இந்த படத்தில் நடிகை கீர்த்திசுரேஷின் தாயார் மேனகா தான் நாயகி என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் டைட்டிலுக்கு அனுமதி கொடுத்து வாழ்த்து தெரிவித்த கவிதாலாயா நிறுவனத்திற்கும் ரஜினிகாந்த் அவர்களுக்கும் விக்னேஷ் சிவன் நன்றி தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினி பட டைட்டிலில் நயன்தாரா நடிக்கவுள்ள இந்த படம் த்ரில், சஸ்பென்ஸ் படம் என்றும், இந்த படத்தில் நயன்தாரா இதுவரை நடித்திராத ஒரு கேரக்டரில் நடிக்கவிருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்தப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்க இருப்பதாகவும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கார்த்திக் கணேஷ் ஒளிப்பதிவில், கிரிஷ் இசையில் லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பில் கமலநாதன் கலை இயக்கத்தில் நவீன் சுந்தரமூர்த்தி வசனத்தில் இந்த படம் உருவாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Happy,proud & blessed ?????? #Nayanthara ‘s 65th film #Netrikann
— ROWDY PICTURES (@VigneshShivN) September 15, 2019
Produced by RowdyPictures ??
Thank you @KavithalayaaOff & #Superstar Rajni sir for the title & the blessings ??@Milind_Rau ‘s unique creation - a thriller ???? shoot starts today wit all ur blessings ???????????? pic.twitter.com/qmHAAxmQ7S
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments