ஜடேஜா அணிக்கு தேவையில்லையா? சஞ்சய் மஞ்ச்ரேக்கரை வச்சு செய்த நெட்டிசன்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியில் 173 என்ற இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணி மிக அபாரமாக விளையாடி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
இந்த போட்டியில் ருத்ராஜ் கெய்க்வாட் அடித்த 53 பந்துகளில் 72 ரன்கள் காரணமாக சென்னை அணி இலக்கை நெருங்கியது. இருப்பினும் மேட்சை முடித்து கொடுக்காமல் கடைசி நேரத்தில் அவர் அவுட் ஆனது அதிருப்திக்குள்ளாகியது
இந்த நிலையில் கடைசி 2 ஓவர்களில் 30 ரன்கள் அடிக்க வேண்டிய நிலை இருந்தது. அப்போது ஜடேஜா விஸ்வரூபம் எடுத்ததார். 19வது ஓவரில் 20 ரன்கள் அடிக்கப்பட்டது. எனவே கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவை என்றாலும் கடைசி இரண்டு பந்துகளில் 7 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. அப்போது ஜடேஜா கடைசி 2 பந்துகளில் 2 சிக்சர்கள் அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார். இதனை அடுத்து ஜடேஜாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியா நாட்டிற்கு செல்லும் இந்திய வீரர்களின் அணி குறித்து கருத்து கூறிய முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர், ‘ரவீந்திர ஜடேஜா டி20 போட்டிகளுக்க ஃபிட் இல்லாதவர் என்றும், அவருக்கு பதிலாக அக்சர் பட்டேல் தான் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று கூறினார்
இந்த டுவிட்டை வைத்து நேற்று நெட்டிசன்கள் அவரை வச்சு செய்து வருகின்றனர். வடிவேலு, கவுண்டமணி, செந்தில் மற்றும் சார்லி உள்பட பல பிரபல நடிகர்களின் படங்களை வைத்து மீம்ஸ் மூலம் கிண்டல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் விமர்சனம் குறித்து ஜடேஜா தனது டுவிட்டரில், ‘நீங்கள் விளையாடிய போட்டிகளின் எண்ணிக்கையைவிட நான் இரண்டு மடங்கு விளையாடியுள்ளேன். இன்னும் விளையாடிக் கொண்டிருக்கின்றேன்/ தயவு செய்து சாதித்த வீரர்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்’ என்று பதிலடி கொடுத்துள்ளார்
ஏற்கனவே கே.எல்.ராகுல் குறித்து விமர்சனம் செய்த சஞ்சய் மஞ்ச்ரேக்கரை ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
Vaii uhhh!!!! pic.twitter.com/SG42G1JQCj
— SelvaGanesh (@iamselva_ganesh) October 29, 2020
I hope you remember! ?? pic.twitter.com/qdlVTimWmx
— Legacy ™ (@mrpalanii) October 27, 2020
completely agree. https://t.co/osH78wATdm
— Sanjay Manjrekar (@sanjaymanjrekar) October 27, 2020
And That's how SIR JADEJA Replies ???? pic.twitter.com/qDH9uA0t5B
— KàlÀi (@mersalkalai64) October 29, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments