இனிமேல் தினகரன் அணியில் இல்லை: ஆணையிட்டு உறுதி செய்த நாஞ்சிலார்
Send us your feedback to audioarticles@vaarta.com
டிடிவி தினகரனின் வலது கரமாகவும், அவரை தமிழக முதல்வராக்காமல் ஓயமாட்டேன் என்றும், அவருக்கு ஆதரவு கொடுப்பதால் என்னை காரி துப்பினாலும் அதை துடைத்தெறிந்துவிட்டு தினகரனின் கரங்களை வலுப்படுத்துவேன் என்றும் பேசிய நாஞ்சில் சம்பத் இன்று திடீரென அவரது அணியில் இருந்து விலகிவிட்டார். இதற்கு அவர் கூறிய காரணம், கட்சியின் பெயரில் அண்ணாவும் இல்லை, திராவிடமும் இல்லை என்பதுதான்
மேலும் தினகரனிடம் இருந்து பிரிந்த அவரை சமாதானப்படுத்தி மீண்டும் அணியில் இணைக்க முயற்சி செய்வோம் என்று தங்கத்தமிழ்செல்வன் கூறியிருந்த நிலையில் அன்னை தமிழ் மீது ஆணையாக இனி தினகரன் அணியில் சேர மாட்டேன்' என்று நாஞ்சில் சம்பத் உறுதியாக கூறியுள்ளார். இந்த நிலையில் இதுவரை தினகரனை ஆதரித்துவிட்டு தற்போது உப்புசப்பில்லாத காரணத்திற்காக பிரிந்து சென்றுள்ளதாக நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் நாஞ்சில் சம்பத் விலகல் குறித்து தினகரன் கூறியபோது, 'திராவிடம் மற்றும் அண்ணாவை புறக்கணிக்கவில்லை.. பெயர் காரணத்தால் நாஞ்சில் சம்பத் விலகியது வருத்தமளிக்கிறது' என்று கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com