இனிமேல் தினகரன் அணியில் இல்லை: ஆணையிட்டு உறுதி செய்த நாஞ்சிலார்

  • IndiaGlitz, [Saturday,March 17 2018]

டிடிவி தினகரனின் வலது கரமாகவும், அவரை தமிழக முதல்வராக்காமல் ஓயமாட்டேன் என்றும், அவருக்கு ஆதரவு கொடுப்பதால் என்னை காரி துப்பினாலும் அதை துடைத்தெறிந்துவிட்டு தினகரனின் கரங்களை வலுப்படுத்துவேன் என்றும் பேசிய நாஞ்சில் சம்பத் இன்று திடீரென அவரது அணியில் இருந்து விலகிவிட்டார். இதற்கு அவர் கூறிய காரணம், கட்சியின் பெயரில் அண்ணாவும் இல்லை, திராவிடமும் இல்லை என்பதுதான்

மேலும் தினகரனிடம் இருந்து பிரிந்த அவரை சமாதானப்படுத்தி மீண்டும் அணியில் இணைக்க முயற்சி செய்வோம் என்று தங்கத்தமிழ்செல்வன் கூறியிருந்த நிலையில் அன்னை தமிழ் மீது ஆணையாக இனி தினகரன் அணியில் சேர மாட்டேன்' என்று நாஞ்சில் சம்பத் உறுதியாக கூறியுள்ளார். இந்த நிலையில் இதுவரை தினகரனை ஆதரித்துவிட்டு தற்போது உப்புசப்பில்லாத காரணத்திற்காக பிரிந்து சென்றுள்ளதாக நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் நாஞ்சில் சம்பத் விலகல் குறித்து தினகரன் கூறியபோது, 'திராவிடம் மற்றும் அண்ணாவை புறக்கணிக்கவில்லை.. பெயர் காரணத்தால் நாஞ்சில் சம்பத் விலகியது வருத்தமளிக்கிறது' என்று கூறியுள்ளார்.

More News

தமிழ் நாட்டிற்கு தலைவன் ஆகும் தகுதி உடையவரா ரஜினி: கரு.பழனியப்பன்

தமிழக அரசியலில் வேறு எந்த நபரும் அரசியலுக்கு வருவதாக கூறியபோது வராத எதிர்ப்பு ரஜினி அரசியலுக்கு வருவதாக கூறியவுடன் வந்துள்ளது.

திராவிட நாடு பிரச்சனையால் திட்டு வாங்கிய எச்.ராஜாவின் அட்மின்

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா காலத்தில் இருந்தே தனி தமிழ்நாடு, திராவிட நாடு போன்ற கோரிக்கைகள் எழுந்தன. ஆனால் அண்ணா முதல்வர் ஆன பின்னர் அந்த கோரிக்கையை கைவிட்டுவிட்டார்.

நடிகைகளுக்கு பாலியல் தொல்லை குறித்து வரலட்சுமியின் தைரியமான கருத்து

கைநிறைய திரைப்படங்கள் ஒருபக்கம், சமூக சேவை ஒரு பக்கம், திரையுலகில் பணிபுரியும் பெண்களுக்காக 'சேவ் சக்தி' என்ற அமைப்பை நடத்தி வருவது இன்னொரு பக்கம் என நடிகை வரலட்சுமி பிசியாக இருந்து வருகிறார்.

மகளின் சினிமா எண்ட்ரி குறித்து கவுதமியின் விளக்கம்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் விக்ரம் மகன் துருவ் நடிக்கும் 'வர்மா' படத்தில் நாயகியாக கவுதமி மகள் சுப்புலட்சுமி நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்தது

கமல்ஹாசனுடன் பிரிவு ஏன்? மனம் திறந்த கவுதமி

கமலுடன் ஏற்பட்ட பிரிவு குறித்து ஏற்கனவே நான் விரிவான விளக்கத்தை என்னுடைய பிளாக்கில் தெளிவாக குறிப்பிட்டுள்ளேன். இந்த முடிவை நான் ஒரே நாள் இரவில் எடுக்கவில்லை