இதெல்லாம் தேவையா? நெட்பிளிக்ஸின் 'மணி ஹெய்ஸ்ட்' அறிவிப்புக்கு நெட்டிசன்கள் கேள்வி!
- IndiaGlitz, [Tuesday,January 18 2022]
நெட்ப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியான ‘மணி ஹெய்ஸ்ட்’ என்ற வெப்சீரிஸ் மிக உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஐந்தாம் சீசனின் இரண்டாம் பாகம் வெளியானது என்பதும் அந்த சீசனுடன் முடிவுக்கு வந்த ‘மணி ஹெய்ஸ்ட்’ கிளைமாக்ஸ் அனைத்து தரப்பினரும் ஏற்கும் வகையில் இருந்தது என்றும் விமர்சனங்கள் வெளியானது
இந்த நிலையில் ‘மணி ஹெய்ஸ்ட்’ வெப்சீரிஸ் தமிழ் உள்பட அனைத்து இந்திய மொழிகளிலும் அதேபோல் உலகின் பல மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது இந்த ‘மணி ஹெய்ஸ்ட்’ வெப்சீரிஸ் கொரிய மொழியில் ரீமேக் செய்யப்பட இருப்பதாக நெட்பிளிக்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இந்த தொடரின் கேரக்டர்களாக புரபொசர், நைரோபி, டென்வர், மாஸ்கோ, டோக்கியோ உள்பட அனைத்து கேரக்டர்களில் நடிக்கும் நட்சத்திரங்களின் பெயர்களையும் நெட்பிளிக்ஸ் அறிவித்துள்ளது
இந்த அறிவிப்பு தற்போது வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ‘மணி ஹெய்ஸ்ட்’ கொரிய மொழியில் டப் செய்ய அந்நாட்டு அரசு அனுமதி அளிக்காதா? இவ்வளவு அருமையான ஒரு வெப்சீரிஸை எதற்காக ரீமேக் செய்யப்பட வேண்டும்? கொரிய மொழியில் டப்பிங் செய்தாலே போதும், மிகச் சிறப்பான தொடர்களை ரீமேக் என்ற பெயரில் கை வைக்காமல் இருப்பதே நல்லது’ என்று கமெண்ட்ஸ் அளித்து வருகின்றனர்.
Meet the cast of Money Heist: Korea - Joint Economic Area
— Netflix (@netflix) January 17, 2022
Professor: Yoo Ji-tae
Seon Woojin: Kim Yunjin
Berlin: Park Hae-soo
Tokyo: Jun Jong-seo
Moscow: Lee Won-jong
Denver: Kim Ji-hun
Nairobi: Jang Yoon-ju
Rio: Lee Hyun-woo
Helsinki: Kim Ji-hoon
Oslo: Lee Kyu-ho pic.twitter.com/CxNiAmjDRa