8000 கோடி மக்களுக்கு ரூ.5000 கோடி உதவியா? மதுவந்தி வீடியோவுக்கு நெட்டிசன்கள் ரியாக்சன்
- IndiaGlitz, [Saturday,April 11 2020]
பிரதமர் மோடி அவர்கள் சமீபத்தில் இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அணைத்துவிட்டு அகல் விளக்கு ஏற்ற சொன்னார். அதற்கு விளக்கம் கூறிய ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் மதுவந்தி அன்றைய தினம் 9 கோள்களும் ஒரே நேர்கோட்டில் வருவதால் விளக்கேற்றினால் கொரோனா வைரஸ் செத்துவிடும் என மதுவந்தி கூறியது பெரும் கிண்டலுக்கு உள்ளானது. அன்றைய planet.comல் 9 கோள்களும் நேர்கோட்டில் இல்லை என்பதும் உறுதியானது.
இந்த நிலையில் மதுவந்தி தற்போது மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டு மீண்டும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளார். அவர் அந்த வீடியோவில் இந்தியாவில் 8,000 கோடி மக்களுக்கு ரூ.5000 கோடியை அவர்களது வங்கிக் கணக்கில் ‘உஜ்வாலா’ திட்டத்தின் கீழ் பிரதமர் மோடி செலுத்தியிருப்பதாக கூறியுள்ளார். இந்தியாவின் மொத்த ஜனத்தொகையே 130 கோடி என்ற நிலையில் 8000 கோடி மக்களுக்கு எப்படி அவர் வங்கி கணக்கில் பணம் செலுத்தினார் என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் உலகின் ஒட்டுமொத்த மக்கள் தொகையே 778 கோடி தான் என்ற நிலையில் வேறு கிரகங்களில் வாழும் மக்களுக்கும் மோடி அரசு பணம் அனுப்பியதா? என்ற கேள்வியையும் நெட்டிசன்கள் எழுப்பியுள்ளனர்.
அப்படியே 8000 கோடி மக்களுக்கு 5000 கோடி ரூபாயை பிரித்து கொடுத்தால் ஒவ்வொருவருக்கும் ரூ.1 கூட வராது என்றும் அந்த பணத்தை வைத்து மக்கள் என்ன செய்வார்கள் என்றும் மதுவந்தியை நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர். மேலும் 30 ஆயிரம் கோடியில் 40% என்பது 20 ஆயிரம் கோடி என்றும் மதுவந்தி அந்த வீடியோவில் கூறியுள்ளார். இதில் இருந்து அவர் கணக்கிலும் வீக் என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றார். ஒரு வீடியோவை வெளியிடும் முன் ஒன்றுக்கு இரண்டு முறை சரிபார்த்து வெளியிடுங்கள் என்றும் ஒருசில நெட்டிசன்கள் மதுவந்திக்கு அறிவுரை தெரிவித்து வருகின்றனர்.
உண்மையில் 8 கோடி மக்களுக்கு 5000 ஆயிரம் கோடி என கூறுவதற்கு பதிலாக 8000 கோடி மக்களுக்கு 5000 கோடி ரூபாய் என வாய்தவறி மதுவந்தி கூறிவிட்டார் என்றும், அவர் கூறிய எண்ணிக்கை வேண்டுமானால் தவறாக இருக்கலாம் ஆனால் அவரது நோக்கத்தில் எந்த தவறும் இல்லை என்றும் ஒருசில நெட்டிசன்கள் அவருக்கு ஆதரவாகவும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். நம்மூரில் ஒருசில அரசியல்வாதிகள் இதைவிட மோசமாக உளறியதையும் நெட்டிசன்கள் சுட்டிக்காட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.