அனிதா கேரக்டரில் ஜூலியா? பொங்கி எழுந்த நெட்டிசன்கள்

  • IndiaGlitz, [Tuesday,March 06 2018]

ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் தமிழகம் முழுவதும் நல்ல பெயர் வாங்கிய ஜூலி, அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். முதலில் ஜூலிக்கு பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் ஜூலியின் பொய், போலித்தனம் ஆகியவை பிக்பாஸ் நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களுக்கு மட்டுமின்றி, பார்வையாளர்களுக்கும்க் வெறுப்பை தந்தது. குறிப்பாக ஓவியாவுக்கு ஜூலி செய்த துரோகத்தை யாராலும் மன்னிக்க முடியாததால் ஒரு கட்டத்தில் அனைவராலும் வெறுக்கப்படும் ஒரு நபராக ஜூலி மாறினார்

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், திரைப்படங்களில் சிறுசிறு வேடங்களிலும் நடித்து வந்த ஜூலி தற்போது நீட் தேர்வின் காரணமாக உயிரிழந்த அரியலூர் அனிதா குறித்த திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக நேற்று விளம்பரம் வெளிவந்துள்ளது.

இதனையறிந்த நெட்டிசன்கள் பொங்கி எழுந்துள்ளனர். உண்மையாக உயிரிழந்த அனிதா கேரக்டரில் பொய்யான ஜூலியா?, அனிதாவை இதைவிட கேவலமா அசிங்கப்படுத்த முடியாது என்றும், தாமரையால் சாகடிக்கப்பட்ட பெண்ணை தாமரையில் உட்கார வைப்பதா? என்றும் நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

More News

ஆஸ்கார் விருது வாங்கிய ஒருசில நிமிடங்களில் நடிகைக்கு ஏற்பட்ட சோகம்

நேற்று அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகையாக Frances McDormand என்பவர் தேர்தெடுக்கப்பட்டு

செல்வராகவனின் NGK-க்கு இத்தனை அர்த்தமா?

செல்வராகவன் படம் தான் யோசிக்க வைக்கும் என்றால் இவருடைய அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரே ரொம்ப யோசிக்க வைக்கின்றது.

அர்ஜூன் ரெட்டி' நாயகனின் முதல் தமிழ் படம்

கடந்த ஆண்டு வெளியான தெலுங்கு திரைப்படமான ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டா நடிக்கும் முதல் தமிழ் படத்தின் தொடக்கவிழா நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது.

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த விஜய்சேதுபதியின் 'ஜூங்கா'

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி தற்போது நடித்து வரும் படங்களில் ஒன்றான 'ஜூங்கா' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது

இன்று லெனின் சிலை, நாளை பெரியார் சிலை: எச்.ராஜாவின் சர்ச்சை பேச்சு

திரிபுரா மாநிலத்தில் சமீபத்தில் நடந்த தேர்தலில் ஆட்சியை பிடித்த பாஜக, வரும் 8ஆம் தேதி தான் பதவியேற்கவுள்ளது. ஆனால் அதற்கு முன்பாகவே பாஜகவினர் அந்த மாநிலத்தில் அராஜகத்தில் ஈடுபட்டு வருவதாக