எச்.ராஜாவின் அட்மினை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

  • IndiaGlitz, [Friday,March 09 2018]

சமீபத்தில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, பெரியார் சிலை குறித்த சர்ச்சைக்குரிய கருத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்தார். இந்த பதிவுக்கு ஒட்டுமொத்த தமிழர்களும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், 'இந்த பதிவை தான் போடவில்லை என்றும் தனக்கு தெரியாமல் தனது அட்மின் பதிவு செய்துள்ளதாகவும், இதற்காக தான் வருந்துவதாகவும் தெரிவித்தார்.

உண்மையில் நான் தான் அந்த பதிவை போட்டேன், அந்த பதிவுக்காக வருந்துகிறேன்' என்று எச்.ராஜா கூறியிருந்தால் கூட இந்த பிரச்சனை முடிவுக்கு வந்திருக்கும். ஆனால் அட்மின் செய்த பதிவு என்று அவர் கூறியது, நெட்டிசன்களுக்கு கிடைத்த அல்வா போல் ஆகிவிட்டது

சமூக வலைத்தளங்களில் அச்சில் ஏற முடியாத வார்த்தைகளை பதிவு செய்து, பின்குறிப்பாக 'எச் ராஜா அவர்களே இந்த வார்த்தைகள் எல்லாம் உங்களை திட்டவில்லை, உங்கள் அட்மினைத்தான் திட்டினோம்' என்று கலாய்த்து வருகின்றனர். இதனால் எச்.ராஜா தரப்பு நொந்து போயிருப்பதாக கூறப்படுகிறது