திராவிட நாடு பிரச்சனையால் திட்டு வாங்கிய எச்.ராஜாவின் அட்மின்
Send us your feedback to audioarticles@vaarta.com
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா காலத்தில் இருந்தே தனி தமிழ்நாடு, திராவிட நாடு போன்ற கோரிக்கைகள் எழுந்தன. ஆனால் அண்ணா முதல்வர் ஆன பின்னர் அந்த கோரிக்கையை கைவிட்டுவிட்டார். இந்த நிலையில் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் தென்மாநிலங்கள் இணைந்து திராவிட நாடு உருவாக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. மேலும் தென்மாநிலங்களில் பாஜகவின் ஆட்சி இல்லாததும் இந்த கோரிக்கைக்கு ஒரு காரணமாக உள்ளது.
இந்த நிலையில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, திராவிட நாடு குறித்து கோரிக்கை குறித்து குரல் எழுப்புபவர்களுக்கு தனது டுவிட்டரில் எச்சரிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடு காடு என்றவர்கள் பிரிவினை கோருவது தண்டனைக்குரிய குற்றம் என்றவுடன் நாங்கள் தனிநாடு கேட்கவில்லை அதிக அதிகாரம் தான் கேட்கிறோம் என்று பின்வாங்கியதை உலகறியும். இன்னமும் அந்தச் சட்டம் இருக்கிறது என்று சிலருக்கு நினைவூட்ட வேண்டியுள்ளது' என்று கூறியுள்ளார்.
எச்.ராஜாவின் இந்த டுவீட்டுக்கு வழக்கம்போல் நெட்டிசன்கள் அவருடைய அட்மினை அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளால் திட்டி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com