இதெல்லாம் ரொம்ப நக்கலு.. ஷெரினுக்கு வீடியோ வெளியிட்ட நெட்டிசன்ஸ்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டில் தற்போது நடைபெற்று வரும் பொம்மை டாஸ்க்கின் மூலம் பல போட்டியாளர்களின் உண்மை சொரூபம் தெரிந்துவிட்டது. கடந்த இரண்டு வாரங்களாக ஒருசில போட்டியாளர்கள் தாங்கள் யார் என்றே தெரியாமல் அமைதியாக இருந்த நிலையில் தற்போது அவர்களுடைய நடிப்பு மற்றும் வஞ்சகம் ஆகியவை இந்த டாஸ்கின் மூலம் வெளியாகி கொண்டிருக்கின்றன.
ஏற்கனவே அசீம் சக போட்டியாளர்கள் மீது வன்முறையாகவும் அநாகரிகமாகவும் நடந்து கொள்கிறார் என்ற நிலையில் தற்போது தனலட்சுமியை அவர் தள்ளிவிட்ட வீடியோ வெளியாகி அவரது நன்மதிப்பை மேலும் குறைத்துள்ளது.
அதேபோல் இந்த டாஸ்கின் போது கீழே விழுந்து விட்டதால் தலையில் ஏதோ பெரிய காயம் ஏற்பட்டது போல் ஷெரின் நடித்ததும் அப்பட்டமாக வீடியோ மூலம் தெரியவந்துள்ளது. ஷெரின் தான் மிகவும் புத்திசாலித்தனமாக இந்த போட்டியை திசைதிருப்பி விட்டதாக நினைத்து கொண்டிருந்தாலும் நெட்டிசன்கள் அவர் நடித்துக் கொண்டிருப்பதை வெட்டவெளிச்சமாக தோலுரித்துக் காட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக மருத்துவ சிகிச்சை பெற்று ஷெரின் மீண்டும் வந்தபோது அவரை அனைவரும் நலம் விசாரித்தனர். தனலட்சுமியும் தனது பங்கிற்கு ‘தலையில் ரொம்ப காயமா? என்று கேட்டபோது அதற்கு பதில் சொல்லாமல் ஷெரின் திரும்பிக் கொண்டது அவருடைய உண்மை முகத்தை வெளியே கொண்டு விட்டதாககவே கருதப்படுகிறது.
இந்த நிலையில் நெட்டிசன்கள் ஷெரினின் நடிப்பை கேலியும் கிண்டலும் செய்து வீடியோ வெளியிட்டு வருகின்றனர். அதில் ஒரு பெண் இன்னொரு பெண்ணை தள்ளிவிடும் போது அந்த பெண் திரைச்சீலை அருகே விழுந்து அந்த திரைச்சீலையை தானே தனது கழுத்தில் மாட்டிக்கொண்டு தூக்கில் தொங்குவது போல் நடிக்கும் காட்சியை ஷெரினுடன் ஒப்பிட்டு நக்கலுடன் பதிவு செய்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
Ultimate sync ??????#BiggBoss #biggboss6tamil #BiggBossTamil6 pic.twitter.com/yBS9w2iiqR
— Vikraman Fan ❤️ (@vikramanfan_bb6) October 27, 2022
Adha aama pa #vikraman sonna mari #sherina Kai vechi balance panni dhan vizhuranga Manda tharaila padala Vila modhu #BiggBossTamil6 #BiggBossTamil#dhanalakshmi #janany #shivin pic.twitter.com/UcFwbgVB0s
— Thomas Shelby ?? (@sharp180820) October 26, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com