அப்ப காவிரி மேலாண்மை வாரியம் வேண்டாம் ப்ளீஸ்: நெட்டிசன்கள் கிண்டல்
- IndiaGlitz, [Wednesday,March 28 2018]
காவிரி மேலாண்மை அமைக்க சுப்ரீம் கோர்ட் விடுத்த கெடு நாளையுடன் முடிவடைகிறது. இதற்காக கடந்த சிலநாட்களாக பாராளுமன்றத்தில் அதிமுக எம்பிக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மாநிலங்களவையில் அதிமுக எம்பி நவநீதிகிருஷ்ணன் இன்று காவிரி விவகாரத்தை எழுப்பினார். அப்போது அவர் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அமல்படுத்தாவிட்டால் அரசியல் சட்டத்தால் என்ன பயன்? என்று கேள்வி எழுப்பினார். மேலும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காவிட்டால் அதிமுக எம்பிக்கள் தற்கொலை செய்து கொள்வோம். என்றும் அவர் ஆவேசமாக கூறியதால் மாநிலங்களவையில் பரபரப்பு ஏற்பட்டது.
நவநீதிகிருஷ்ணன் எம்பி கூறிய இந்த விஷயத்தையும் நெட்டிசன்கள் விட்டுவைக்கவில்லை. எங்களுக்கு காவிரி மேலாண்மை வாரியம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை நவநீதகிருஷ்ணன் சொன்னது நடந்தால் போதும் என்று ஒருசில நெட்டிசன்கள் மீம்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.