கொரோனா ஹேர் ஸ்டைலா??? நடிகை ரகுல் ப்ரீதிசிங்கை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!!!

  • IndiaGlitz, [Monday,December 28 2020]

 

தமிழ், தெலுங்கு மட்டுமல்லாது தற்போது இந்தி சினிமாவிலும் கால்பதித்து இருக்கிறார் நடிகை ரகுல் ப்ரீதிசிங். இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார். இந்தப் புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் தாறுமாறாக கேள்வி எழுப்பி வருகின்றனர். காரணம் அதில் அவருடைய தலைமுடி இங்கும் அங்குமாக நீட்டிக் கொண்டு இருக்கிறது.

இதைப் பார்த்த நம்முடைய நெட்டிசன்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக கூறினீர்களே? அப்போ இது கொரோனா ஹேர் ஸ்டைலா? என கமெண்ட் அடித்து உள்ளனர். மேலும் ஏன் ஒல்லியாக தெரியுறீங்க? கொரோனா வந்ததால் உடம்பு மெலிந்து விட்டதா என அக்கறையோடும் சிலர் கமெண்டுகளை பதிவிட்டு உள்ளனர். இந்நிலையில் ரகுலின் ஹேர்ஸ்டைலுக்கு காஜல் அகர்வால் உள்ளிட்ட சில தெலுங்கு பிரபலங்கள் லைக்குகளை அள்ளி வீசியும் வருகின்றனர்.

தமிழின் முன்னணி நடிகர்களாக சூர்யா, கார்த்திக்குடன் ஜோடி போட்ட இவர் தற்போது சிவகார்த்திக்கேயனுடன் அயலான் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ஏற்கனவே படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விழுந்து சர்ச்சையை ஏற்படுத்திய இந்தியன் 2 படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதோடு மேடே இந்தி படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி இருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தனக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாக இன்ஸ்டாவில் தெரிவித்து இருந்த ரகுல் தற்போது நல்ல உடல்நிலையுடன் காட்சி அளிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.