பிராவோ பற்றி சொன்னது ஞாபகமில்லையா? ஐஷுவுக்கு குறும்படம் போட்ட நெட்டிசன்கள்..!

  • IndiaGlitz, [Thursday,November 09 2023]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மாயா, பூர்ணிமா கேங் அத்துமீறி சக போட்டியாளர்களிடம் நடந்து கொண்டிருக்கின்றனர் என்பதை கடந்த சில நாட்களாக பார்த்து வருகிறோம். பிரதீப் பெண்களுக்கு ஆபத்தானவர் என்ற குற்றச்சாட்டு கூறும் வாய்ப்பை பயன்படுத்தி அவரை வெளியேற்றிய மாயா குரூப், அடுத்து பிராவோவை டார்கெட் செய்துள்ளனர்.

நேற்று நடந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் கூறிய கருத்துக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று பிக் பாஸ் கூறிய நிலையில் பூர்ணிமா மாயா மாற்றம் ஐஷு ஆகிய மூவரும் பிராவோ குறித்து கூறிய கருத்துக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று பிக்பாஸ் தெரிவித்தார்.

இது குறித்து மாயா விளக்கம் அளிக்க வந்த போது 'அதில் என்ன தப்பு இருக்கு, சாதாரணமாகத்தான் சொன்னேன்’ என்று கூறினார். அப்போது தினேஷ் ‘உங்களை எல்லாரும் மேல இருந்து கீழே தான் பாக்குறாங்களா? என கேட்டதற்கு ‘நீங்கள் என்னுடைய பெயரை டேமேஜ் செய்கிறீர்கள்’ என்று சொல்ல, நீங்க தான் பிராவோ பெயரை டேமேஜ் செய்திருக்கிறீர்கள்’ என்று தினேஷ் பதிலடி கொடுத்தார்.

’சும்மா விளையாட்டுக்கு கூறியதாக தெரிவித்த ஐஷு, ஆனால் அப்படி கூறியதாக தனக்கு ஞாபகம் இல்லை என்று கூறினார். இதனை அடுத்து மாயா பூர்ணிமா மற்றும் ஐஷு ஆகிய மூவரும் பேசிய வீடியோவை குறும்படமாக நெட்டிசன்கள் வெளியிட்டு பதிலடி கொடுத்து வருகின்றனர். அந்த குறும்படத்தில் பிராவோ குறித்து தவறான முறையில் மூவரும் பேசி உள்ள காட்சிகள் உள்ளன. மொத்தத்தில் மாயா, பூர்ணிமா குரூப்பின் சாயம் வெளுத்து விட்டது என்பதையே இது காட்டுகிறது.

More News

சிம்புவின் அடுத்த படம் வெளியாக இன்னும் 2 ஆண்டுகள் ஆகுமா? ரசிகர்கள் அதிருப்தி.!

நடிகர் சிம்புவின் அடுத்த திரைப்படம் 2025 ஆம் ஆண்டு தான் வெளியாகும் என்று கூறப்படுவதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

உங்கள் கைதட்டல்களில் தான் எங்கள் மகிழ்ச்சி இருக்கிறது.. லேபில் சீரிஸ் குறித்து அருண்ராஜா காமராஜ்..!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார்,  இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், நடிகர்கள் ஜெய் மற்றும் தன்யா ஹோப் ஆகியோரின் நடிப்பில், உருவாகியிருக்கும்

மாயா, விசித்ரா கேங் விவகாரம்.. பிக்பாஸ் வைத்த எதிர்பாராத டிவிஸ்ட்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பிரதீப் வெளியேற்றப்பட்ட பின் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பாக மாயா கேப்டன் ஆக ஆனதிலிருந்து இரு அணிகள் பிக்பாஸ் வீட்டில் பிரிந்து

முடிகிறது 'கங்குவா' படப்பிடிப்பு.. சூர்யாவின் அடுத்த திட்டம்.

 சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'கங்குவா' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி

உன் மேல எனக்கு ஃபீலே வரவில்லை.. நிக்சனுக்கு ஷாக் கொடுத்த ஐஷு..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் ஒரு காதல் ஜோடி உருவாகி வரும் நிலையில் இந்த சீசனின் காதல் ஜோடி நிக்ஸன் மற்றும் ஐஷு என்று எதிர்பார்க்கப்பட்டது. ஐஷுவிடம் நிக்சன்  எல்லை மீறும் பல காட்சிகளை