பிராவோ பற்றி சொன்னது ஞாபகமில்லையா? ஐஷுவுக்கு குறும்படம் போட்ட நெட்டிசன்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மாயா, பூர்ணிமா கேங் அத்துமீறி சக போட்டியாளர்களிடம் நடந்து கொண்டிருக்கின்றனர் என்பதை கடந்த சில நாட்களாக பார்த்து வருகிறோம். பிரதீப் பெண்களுக்கு ஆபத்தானவர் என்ற குற்றச்சாட்டு கூறும் வாய்ப்பை பயன்படுத்தி அவரை வெளியேற்றிய மாயா குரூப், அடுத்து பிராவோவை டார்கெட் செய்துள்ளனர்.
நேற்று நடந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் கூறிய கருத்துக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று பிக் பாஸ் கூறிய நிலையில் பூர்ணிமா மாயா மாற்றம் ஐஷு ஆகிய மூவரும் பிராவோ குறித்து கூறிய கருத்துக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று பிக்பாஸ் தெரிவித்தார்.
இது குறித்து மாயா விளக்கம் அளிக்க வந்த போது 'அதில் என்ன தப்பு இருக்கு, சாதாரணமாகத்தான் சொன்னேன்’ என்று கூறினார். அப்போது தினேஷ் ‘உங்களை எல்லாரும் மேல இருந்து கீழே தான் பாக்குறாங்களா? என கேட்டதற்கு ‘நீங்கள் என்னுடைய பெயரை டேமேஜ் செய்கிறீர்கள்’ என்று சொல்ல, நீங்க தான் பிராவோ பெயரை டேமேஜ் செய்திருக்கிறீர்கள்’ என்று தினேஷ் பதிலடி கொடுத்தார்.
’சும்மா விளையாட்டுக்கு கூறியதாக தெரிவித்த ஐஷு, ஆனால் அப்படி கூறியதாக தனக்கு ஞாபகம் இல்லை என்று கூறினார். இதனை அடுத்து மாயா பூர்ணிமா மற்றும் ஐஷு ஆகிய மூவரும் பேசிய வீடியோவை குறும்படமாக நெட்டிசன்கள் வெளியிட்டு பதிலடி கொடுத்து வருகின்றனர். அந்த குறும்படத்தில் பிராவோ குறித்து தவறான முறையில் மூவரும் பேசி உள்ள காட்சிகள் உள்ளன. மொத்தத்தில் மாயா, பூர்ணிமா குரூப்பின் சாயம் வெளுத்து விட்டது என்பதையே இது காட்டுகிறது.
#Aishu says i didn't remember what I say about #RJBravo
— Sekar 𝕏 (@itzSekar) November 8, 2023
Here it's kurumpadam for Aishu #BiggBoss7 #BiggBossTamil #BiggBossTamil7 #BiggBoss7tamilpic.twitter.com/dzdeLRUTfP
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com