உங்களுக்கு தான் கவின், இந்த பொம்பளைங்களே இப்படித்தான்: லாஸ்லியா பதிவு குறித்து நெட்டிசன் கமெண்ட்!

பிக்பாஸ் லாஸ்லியா அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை பதிவு செய்து அதில் அர்த்தமுள்ள கேப்ஷனையும் பதிவு செய்வார் என்பது தெரிந்தது. அந்த வகையில் இன்று அவர் ஒரு அழகிய புகைப்படத்தை பதிவு செய்து அதில் ’மற்றவர்களின் இதயத்தை வெல்ல உங்களை மாற்ற வேண்டாம். உண்மையாக இருங்கள்’ என்று பதிவு செய்துள்ளார்

இந்த புகைப்படத்திற்கும் கேப்ஷனுக்கும் நெட்டிசன்கள் பல்வேறு கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றார்கள். அதில் ஒரு நெட்டிசன் ’உங்களுக்கு தான் கவின் இந்த பதிவு, இந்த பொம்பளைங்களே இப்படித்தான்’ என்று பதிவு செய்துள்ளார்

அதேபோல் ’ஹலோ அண்ணி கவின் அண்ணன் எப்படி இருக்காரு? கவின் லாஸ்லியா தான் எங்களுக்கு எப்போதும்’ என்று இன்னொரு நெட்டிசன் கூறியுள்ளார். மேலும் ஒரு நெட்டிசன் ’கவினை உண்மையா இன்னும் லவ் பண்றீங்க போல’ என்று கமெண்ட் செய்துள்ளார்

ஒருசிலர் கவினை சம்பந்தப்படுத்தி கமெண்ட்ஸ் செய்தாலும் பலர் லாஸ்லியாவின் புகைப்படத்திற்கும், கேப்ஷனுக்கும் பாசிட்டிவ் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து, வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

சமீபத்தில் தர்ஷனுடன் ‘கூகுள் குட்டப்பன்’ என்ற திரைப்படத்தில் நடிக்க லாஸ்லியா ஒப்பந்தம் ஆனார் என்பதும் அந்த திரைப்படத்தை கேஎஸ் ரவிக்குமார் தயாரிக்க உள்ளார் என்பதும் தெரிந்தது. மேலும் அர்ஜூன், ஹர்பஜன்சிங் நடிக்கும் ‘ப்ரெண்ட்ஷிப்’ உள்பட இரண்டு திரைப்படங்களில் ஏற்கனவே லாஸ்லியா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

காதலரை கட்டியணைத்து ரொமான்டிக் போஸ்: சீரியல் நடிகை ஷேர் செய்த பீச் புகைப்படங்கள்!

காதலரை கட்டி அணைத்து நெருக்கமான போஸ் கொடுத்த புகைப்படங்களை பிரபல சீரியல் நடிகை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

பிக்பாஸின் மாஸ் வெற்றியாளர் ஆரியின் மனம் திறந்த பேட்டி! ரசிகர்களுடன் உரையாடிய வைரல் வீடியோ!

பிக்பாஸ் 4 ஆவது சீசனில் இதுவரை இல்லாத அளவிற்கு ரசிகர்களின் அதிக வாக்குகளையும் ஆதரவையும் பெற்று வெற்றிப் பெற்றார் ஆரி அர்ஜுனன்.

இவரது இடத்தை எந்த கொம்பனாலும் நிரப்ப முடியாது… பெருமிதம் கொள்ளும் மும்பை கேப்டன்!

இந்திய ஐபிஎல் தொடங்கியதில் இருந்தே மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கிரிக்கெட் போட்டியில் விளையாடி வரும் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் இந்திய வம்சாவளி வீரர்? அதுவும் 19 வயதில்?

இந்தியாவை பூர்வீகமாக கொண்ட 19 வயது இளைஞர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு விளையாட தேர்வாகி உள்ளார்.

கடன் தொல்லையால் ஒரு குடும்பமே ரயில் முன்பாய்ந்து தற்கொலை… அதிர்ச்சி சம்பவம்!

கொரோனா நேரத்தில் பல குடும்பங்கள் வேலை வாய்ப்பை இழந்து, வாழ்வதற்கு வழியில்லாமல் தவித்து வருகின்றனர்.