விசித்ரா குறிப்பிட்ட அந்த சம்பவம் நடந்த படம் இதுவா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான விசித்ரா தனக்கு திரையுலகில் நேர்ந்த கொடூரம் குறித்து கூறிய நிலையில் அவருக்கு நேர்ந்த அந்த பாலியல் துன்புறுத்தல் குறித்த படம் எது என்பது குறித்த தகவல்களை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.
50க்கும் மேற்பட்ட ஸ்டண்ட் நடிகர்களுடன் ஒரு சண்டைக் காட்சி எடுக்கும் போது தன்னை ஒரு துணை நடிகர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் அதை கையும் களவுமாக பிடித்து ஸ்டண்ட் மாஸ்டர் இடம் கூறிய போது அவர் தன்னை கன்னத்தில் அறைந்ததாகவும் விசித்ரா தெரிவித்திருந்தார்.
இந்த சம்பவம் பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடித்த 'பலேவடிவி பாசு’ (Bhalevadivi Basu") என்ற தெலுங்கு திரைப்படம் என்பதும் அந்த படத்திற்கு ஸ்டண்ட் இயக்குனராக விஜய் என்பவர் பணிபுரிந்துள்ளார் என்றும் நெட்டிசன்கள் வீடியோ ஆதாரத்துடன் பகிர்ந்துள்ளனர். இந்த நிலையில் தற்போது இந்த ஸ்டண்ட் காட்சியின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
விசித்ராவுக்கு நேர்ந்த கொடுமையை பல ஆண்டுகளுக்கு பிறகு அவர் தற்போது தைரியமாக கூறியுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட திரையுலகம் இதற்கான நடவடிக்கைகளை எடுப்பார்களா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இருப்பினும் மிக நீண்ட காலத்திற்கு பிறகாவது தைரியமாக தனக்கு நேர்ந்த கொடுமையை வெளிப்படையாக கூறியுள்ள விசித்ராவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமையை வெளியே சொல்லாமல் மறைப்பதால்தான் குற்றம் செய்பவர்களுக்கு தைரியம் அதிகமாகி வருகிறது என்றும் விசித்ரா போன்று அனைவரும் தைரியமாக வெளியே சொன்னால்தான் இது போன்ற குற்றங்களை செய்பவர்களுக்கு ஒரு பயம் இருக்கும் என்றும் நெட்டிசன் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
#BiggBossTamil7 SHOCKING - #Vichitra shares her bad experiences while shooting for a Telugu film 🙄😮#BiggBoss7Tamil #BiggBossTamilSeason7pic.twitter.com/AUnwTIxv6r
— VCD (@VCDtweets) November 21, 2023
#Vichithra's harrowing experience was in this movie!!
— Bad Boss (@StoryTimeWithK) November 21, 2023
It's frickin sad that some women will still be going thru this as he is still active in the industry 🤮#BiggBossTamil #biggbosstamil7 pic.twitter.com/DFH4znigoC
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments