விசித்ரா குறிப்பிட்ட அந்த சம்பவம் நடந்த படம் இதுவா?

  • IndiaGlitz, [Wednesday,November 22 2023]

பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான விசித்ரா தனக்கு திரையுலகில் நேர்ந்த கொடூரம் குறித்து கூறிய நிலையில் அவருக்கு நேர்ந்த அந்த பாலியல் துன்புறுத்தல் குறித்த படம் எது என்பது குறித்த தகவல்களை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.

50க்கும் மேற்பட்ட ஸ்டண்ட் நடிகர்களுடன் ஒரு சண்டைக் காட்சி எடுக்கும் போது தன்னை ஒரு துணை நடிகர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் அதை கையும் களவுமாக பிடித்து ஸ்டண்ட் மாஸ்டர் இடம் கூறிய போது அவர் தன்னை கன்னத்தில் அறைந்ததாகவும் விசித்ரா தெரிவித்திருந்தார்.

இந்த சம்பவம் பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடித்த 'பலேவடிவி பாசு’ (Bhalevadivi Basu) என்ற தெலுங்கு திரைப்படம் என்பதும் அந்த படத்திற்கு ஸ்டண்ட் இயக்குனராக விஜய் என்பவர் பணிபுரிந்துள்ளார் என்றும் நெட்டிசன்கள் வீடியோ ஆதாரத்துடன் பகிர்ந்துள்ளனர். இந்த நிலையில் தற்போது இந்த ஸ்டண்ட் காட்சியின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விசித்ராவுக்கு நேர்ந்த கொடுமையை பல ஆண்டுகளுக்கு பிறகு அவர் தற்போது தைரியமாக கூறியுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட திரையுலகம் இதற்கான நடவடிக்கைகளை எடுப்பார்களா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இருப்பினும் மிக நீண்ட காலத்திற்கு பிறகாவது தைரியமாக தனக்கு நேர்ந்த கொடுமையை வெளிப்படையாக கூறியுள்ள விசித்ராவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமையை வெளியே சொல்லாமல் மறைப்பதால்தான் குற்றம் செய்பவர்களுக்கு தைரியம் அதிகமாகி வருகிறது என்றும் விசித்ரா போன்று அனைவரும் தைரியமாக வெளியே சொன்னால்தான் இது போன்ற குற்றங்களை செய்பவர்களுக்கு ஒரு பயம் இருக்கும் என்றும் நெட்டிசன் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

More News

திரைத்துறையில் விசித்ராவுக்கு ஏற்பட்ட கொடுமை.. குரல் கொடுப்பாரா வுமன் சேஃப்டி கமல்ஹாசன்?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது  பூகம்பம் டாஸ்க் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக தங்கள் வாழ்க்கையை நடந்த கசப்பான சம்பவம் குறித்து போட்டியாளர்கள் கண்ணீர் கதைகளை பகிர்ந்து வருகின்றனர்.

சித்தார்த்தின் 'சித்தா': புதிய ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

விமர்சகர்களால் கொண்டாடப்பட்ட “சித்தா” திரைப்படம், நவம்பர் 28 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த படம் நவம்பர் 17ஆம் தேதி

மாயா, பூர்ணிமா கேங்கில் இருந்து விலகிவிட்டாரா? மறைமுகமாக தெரிவித்த ஜோவிகா..!

பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ஜோவிகா ஆரம்பத்தில் தனித்து விளையாடிய நிலையில் கடந்த சில நாட்களாக அவர் மாயா  பூர்ணிமா கேங்கில் இருந்து வருகிறார் என்பது பார்வையாளர்களுக்கு தெரிந்திருக்கும்.

'கலைஞர் 100' விழாவில் அஜித் கலந்து கொள்வாரா? ஆர்கே செல்வமணி பதில்..!

திரை உலகினர் சார்பில் கலைஞர் 100' என்ற விழா டிசம்பர் 24ஆம் தேதி நடத்தப்பட இருக்கும் நிலையில் இந்த விழாவில் கலந்து கொள்ள ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன்

த்ரிஷா பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க மன்சூர் அலிகான் இதை செய்ய வேண்டும்: பாரதிராஜா

நடிகர் மன்சூர் அலிகான், நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில் இந்த பிரச்சனைக்கு மன்னிப்பு கேட்டு மன்சூர் அலிகான் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என நடப்பு தயாரிப்பாளர்