close
Choose your channels

விஜய் அணிந்துள்ள செருப்பின் விலை இவ்வளவா? நெட்டிசன்கள் எதை ஆய்வு செய்திருக்கிறார்கள் பாருங்கள்?

Wednesday, December 14, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நேற்று தளபதி விஜய், விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளை சந்தித்து நிலையில் நேற்றைய சந்திப்பின் போது அவர் அணிந்திருந்த செருப்பு விலை குறித்து நெட்டிசன்கள் ஆய்வு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தளபதி விஜய் ஒவ்வொரு மாதமும் தனது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து வருகிறார் என்பதும் கடந்த மாதம் அவர் நிர்வாகிகளை சந்தித்த நிலையில் நேற்று அவர் மீண்டும் நிர்வாகிகளை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று விஜய் மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவரை தூக்கியவாறு இருந்த புகைப்படம் இணையதளங்களில் வைரலானது என்பதும் இந்த புகைப்படத்தை விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருந்த நிலையில் இந்த புகைப்படம் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த புகைப்படத்தில் விஜய்யின் மனித நேயத்தை ஒரு பக்கம் விஜய் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் ஒரு சில நெட்டிசன்கள் இந்த புகைப்படத்தில் விஜய் அணிந்திருந்த செருப்பை ஆய்வு செய்து அந்த செருப்பின் விலை எவ்வளவு என்பது குறித்து பதிவு செய்துவருகின்றனர்.

இந்த புகைப்படத்தில் உள்ள விஜய் அணிந்திருந்த செருப்பின் விலை ரூ.5999 என்றும், அந்த செருப்பு எந்த பிராண்ட் என்ற விபரங்களையும் நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்.

விஜய் போன்ற மாஸ் நடிகரின் புகைப்படத்தையும் அவரது மனிதாபிமானத்தையும் விஜய் ரசிகர்கள் போற்றி கொண்டிருக்கும் நிலையில் ஒருசில நெட்டிசன்கள் வேண்டும் என்று நெகட்டிவ் விமர்சனத்தை பரப்ப வேண்டும் என்பதற்காக அவர் அணிந்திருந்த செருப்பின் விலையை கண்டு பிடித்து வைரல் ஆக்கி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment