சௌந்தர்யாவை பொளந்து விடுங்க சார்.. விஜய்சேதுபதிக்கு வேண்டுகோள் விடுக்கும் ரசிகர்கள்..!

  • IndiaGlitz, [Tuesday,December 03 2024]

பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான சௌந்தர்யா பாடி லாங்குவேஜ் உடன் கத்தும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் எரிச்சல் அடைந்த பார்வையாளர்கள் ’சௌந்தர்யாவை போட்டு பொளந்து விடுங்கள் விஜய் சேதுபதி சார்’ என வேண்டுகோள் விடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் போட்டியாளர்கள் தங்களுடைய முழு திறமையை காண்பித்து, பல்வேறு தந்திரங்களை பயன்படுத்தி விளையாடி வருகின்றனர். அந்த வகையில் ஆரம்பம் முதலே சௌந்தர்யா வித்தியாசமான பாடி லாங்குவேஜ், வித்தியாசமான குரல் வளம் ஆகியவைகளுடன் விளையாடி வருகிறார் என்பதும் சில நேரங்களில் அவர் சக போட்டியாளர்களை கேலி செய்தும் சிலரை அணைத்து அரவணைத்தும் வரும் நிலையில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அவருக்கு பார்வையாளர்கள் மத்தியில் நல்ல கைதட்டல் கிடைத்து வருகிறது.

இறுதி போட்டிக்கு தகுதி பெறக்கூடிய போட்டியாளர்களில் ஒருவராக சௌந்தர்யா இருப்பார் என்று கூறப்பட்டாலும் சில நேரங்களில் அவருடைய செயல் எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக சற்று முன் சமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோவில் பைத்தியம் போல அவர் கத்திக்கொண்டு பிறரை இம்சித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் சௌந்தர்யாவுக்கு எதிரான கருத்துக்கள் கமெண்ட்களில் பதிவாகி வருகிறது. ’விஜய் சேதுபதி சார் இந்த வாரம் சனி ஞாயிறு இவங்கள போட்டு பொளந்து விடுங்கள்’ என்று கமெண்ட்கள் பதிவாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.