இந்தியை ஏற்க மாட்டோம் ஆனால் இந்தி படங்கள் இயக்க துடிப்போம்: தமிழ் இயக்குனருக்கு குவியும் கண்டனம்
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியை ஏற்க மாட்டோம் ஆனால் இந்தி படங்களை இயக்க மட்டும் துடிப்போம் என தமிழ் இயக்குனர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ள நிலையில் அவருக்கு ஏராளமான நெட்டிசன்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
’திரெளபதி’, ‘ருத்ரதாண்டவம்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய மோகன்ஜி தற்போது ’பகாசூரன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் செல்வராகவன், நட்டி நடராஜன் ஆகியோர் நடித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்தி தேசிய மொழி என்ற சர்ச்சை எழுந்து வரும் நிலையில் இதுகுறித்து இயக்குனர் மோகன் ஜி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: இந்தி ஏற்க மாட்டோம் ஆனால் இந்தி படங்கள் இயக்க துடிப்போம், இந்தி படிக்க புடிக்காது ஆனால் இந்தி நடிகர்கள், நடிகைகளை தமிழில் நடிக்க வைப்போம், இந்தி பேச புடிக்காது ஆனால் தமிழ் படங்களை இந்தியில் மொழி பெயர்த்து லாபம் அடைவோம்.. தமிழின் பெயரை சொல்லி ஏழை மக்களை ஏமாற்றுவதை நிறுத்துங்கள்.. இப்படி பேசும் எந்த சினிமா பிரபலமும் தங்கள் பிள்ளைகளை தமிழ் மொழி வழி பாடத்தில் படிக்க வைப்பதில்லை... அப்படி படிக்க வைப்பவர்கள் இதை பேசட்டும்.. ஆதரவு தரலாம்.. என்று கூறியுள்ளார்.
இயக்குனர் மோகன் ஜியின் இந்த கருத்துக்கு மிகச் சிலர் மட்டுமே ஆதரவு தந்துள்ள நிலையில் ஏராளமானோர் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தி ஏற்க மாட்டோம் ஆனால் இந்தி படங்கள் இயக்க துடிப்போம், இந்தி படிக்க புடிக்காது ஆனால் இந்தி நடிகர்கள், நடிகைகளை தமிழில் நடிக்க வைப்போம், இந்தி பேச புடிக்காது ஆனால் தமிழ் படங்களை இந்தியில் மொழி பெயர்த்து லாபம் அடைவோம்.. தமிழின் பெயரை சொல்லி ஏழை மக்களை ஏமாற்றுவதை நிறுத்துங்கள்..
— Mohan G Kshatriyan (@mohandreamer) April 29, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout