நக்மா வெளியிட்ட ரிஷிகபூரின் வீடியோவுக்கு கண்டனம் தெரிவித்த நெட்டிசன்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
பழம்பெரும் பாலிவுட் நடிகர் ரிஷிகபூர் மூச்சுத்திணறல் காரணமாக நேற்றிரவு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் இன்று காலை அவர் சிகிச்சையின் பலனின்றி காலமானார். ஏற்கனவே இர்பான்கான் மறைவால் அதிர்ச்சியில் இருந்த பாலிவுட் திரையுலகம் ரிஷிகபூரின் மறைவால் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றது. ரிஷிகபூரின் மறைவுக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட தென்னிந்திய பிரபல நடிகர்களும் சமூக வலைத்தளங்கள் மூலம் தங்களது இரங்கலை தெரிவித்தனர்.
இந்த நிலையில் ரஜினிகாந்த் நடித்த ‘பாட்ஷா’ உள்பட பல திரைப்படங்களில் நாயகியாக நடித்த நடிகை நக்மா, தனது சமூக வலைத்தளத்தில் மருத்துவமனையில் புன்னகையுடன் ரிஷிகபூர் இருந்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ரிஷிகபூருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் ஒருவர் ரிஷிகபூர் பாடலை பாடுவதும் அதற்கு ரிஷிகபூர் பாராட்டு தெரிவிக்கும் காட்சியும் இருந்தது.
இந்த பதிவில் நடிகை நக்மா, இந்த விடீயோ நேற்றிரவு மருத்துவமனையில் எடுக்கப்பட்டதாக கூறியிருந்தார். ஆனால் உண்மையில் இந்த வீடியோ கடந்த பிப்ரவரி மாதம் எடுக்கப்பட்டது என்றும், நக்மா தவறாக தகவலை அளித்துள்ளதாகவும், உடனடியாக இந்த வீடியோவை நீக்கிவிடவும் என்றும் சமூக வலைத்தள பயனாளிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Clip of last night, with doctors at the Reliance Foundation Hospital, Mumbai. You are a Legend Rishiji you will always be in our hearts and mind pic.twitter.com/g1Tj01JbgW
— Nagma (@nagma_morarji) April 30, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments