கமல் செய்யாததை செய்த நாகார்ஜூனன்.. இதுதான் உண்மையான வுமன் சேஃப்டி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசன் செய்யாததை பிக் பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நாகார்ஜுனா செய்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பிரதீப் மீது அபாண்டமாக மாயா, பூர்ணிமா உள்பட ஒரு சில பெண் போட்டியாளர்கள் பழி சுமத்தியபோது அதை தீர விசாரிக்காமல் கமல், பிரதீப்பை வெளியேற்ற முடிவெடுத்தார். அதன் பின்னர் அவர் தனது தவறை சரியானது என்று நிரூபிக்க சனி ஞாயிறு என்ற இரண்டு நாள் நிகழ்ச்சிகளை பயன்படுத்திக் கொண்டதாகவும் கூறப்பட்டது. இருப்பினும் பார்வையாளர்கள் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் பிக் பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியை தொகுத்து வரும் நாகார்ஜுனா, பெண் போட்டியாளரை உருவ கிண்டல் செய்த ஆண் போட்டியாளரை கண்டித்துள்ளார். சம்பந்தப்பட்ட பெண் போட்டியாளரே அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாவிட்டாலும் தொகுப்பாளர் நாகார்ஜுனா அதை சுட்டிக்காட்டி அவருக்கு செம டோஸ் விட்டார்.
இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் நாகார்ஜூனா செய்ததை கமல்ஹாசன் செய்ய தவறிவிட்டார் என விமர்சனம் செய்து வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்காமல் பிக்பாஸ் குழுவினர் சொல்லும் தகவல்களை வைத்து கமல்ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருவதாகவும் ஆனால் எல்லா எபிசோடையும் பார்த்து போட்டியாளர்களுடன் என்ன பேச வேண்டும் என்று முடிவு செய்து நாகார்ஜூனா வருவதாகவும் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Im watching Telugu bigg boss. Sema mass ah iruku. Tamilayum onnu nadakudhe 😖😖😖
— Goku (@dude_blr) November 14, 2023
Chinna vayasula olunga padikalana onnu solluvanga
Avan mootharatha vaangi kudi, apayachum buththi varudhanu paapom nu
Dai comalihassan 😡 #BiggBossTamil7#biggbosstamil pic.twitter.com/FccwLptNno
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments