கமல் செய்யாததை செய்த நாகார்ஜூனன்.. இதுதான் உண்மையான வுமன் சேஃப்டி..!

  • IndiaGlitz, [Wednesday,November 15 2023]

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசன் செய்யாததை பிக் பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நாகார்ஜுனா செய்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பிரதீப் மீது அபாண்டமாக மாயா, பூர்ணிமா உள்பட ஒரு சில பெண் போட்டியாளர்கள் பழி சுமத்தியபோது அதை தீர விசாரிக்காமல் கமல், பிரதீப்பை வெளியேற்ற முடிவெடுத்தார். அதன் பின்னர் அவர் தனது தவறை சரியானது என்று நிரூபிக்க சனி ஞாயிறு என்ற இரண்டு நாள் நிகழ்ச்சிகளை பயன்படுத்திக் கொண்டதாகவும் கூறப்பட்டது. இருப்பினும் பார்வையாளர்கள் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிக் பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியை தொகுத்து வரும் நாகார்ஜுனா, பெண் போட்டியாளரை உருவ கிண்டல் செய்த ஆண் போட்டியாளரை கண்டித்துள்ளார். சம்பந்தப்பட்ட பெண் போட்டியாளரே அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாவிட்டாலும் தொகுப்பாளர் நாகார்ஜுனா அதை சுட்டிக்காட்டி அவருக்கு செம டோஸ் விட்டார்.

இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் நாகார்ஜூனா செய்ததை கமல்ஹாசன் செய்ய தவறிவிட்டார் என விமர்சனம் செய்து வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்காமல் பிக்பாஸ் குழுவினர் சொல்லும் தகவல்களை வைத்து கமல்ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருவதாகவும் ஆனால் எல்லா எபிசோடையும் பார்த்து போட்டியாளர்களுடன் என்ன பேச வேண்டும் என்று முடிவு செய்து நாகார்ஜூனா வருவதாகவும் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

More News

ரஜினி அல்லது சூர்யா நடிக்க வேண்டிய படம்.. கெளதம் மேனன் பகிர்ந்த ஆச்சரிய தகவல்..!

பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் வரும் 24ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் ரஜினி அல்லது சூர்யா நடிக்க வேண்டிய படம் என்று

ஸ்கூல் முடித்து விட்டாயா என கிண்டல் செய்த அஜித்... பிரபல இயக்குனர் பகிர்ந்த தகவல்..!

'ஆரம்பம்' படத்தின் படப்பிடிப்பின் போது தான் அஜித்தை முதன் முதலாக சந்தித்ததாகவும் அப்போது தன்னை பார்த்து 'ஸ்கூல் படித்து முடித்து விட்டாயா' என அஜித் கிண்டல் செய்ததாகவும் பிரபல

என்னை இனிமேல் இப்படித்தான் கூப்பிடணும்.. விசித்ராவுக்கு நிபந்தனை விதித்த மாயா-பூர்ணிமா..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் கடந்த வாரம் மாயா மற்றும் பூர்ணிமா செய்த தவறுகளை கமல்ஹாசன் சுட்டிக்காட்டினார்.

மாயா - பூர்ணிமா டம்மி பிளேயர்ஸ்.. சொன்னது யார் தெரியுமா?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மாயா மற்றும் பூர்ணிமா ஆகிய இருவரும் தங்களை  வலிமையான போட்டியாளர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர்கள்

3 மாதம் லிவிங் டுகெதர்.. அப்புறம்தான் கல்யாணம்.. டிடிஎப் வாசன்..

பைக்கில் செல்லும் போது வீலிங் செய்து விபத்தை ஏற்படுத்தியதாக டிடிஎப் வாசன் கைது செய்யப்பட்டு சமீபத்தில் தான் ஜாமீனில் வெளிவந்துள்ளார். இந்த நிலையில் மூன்று மாதம் ஒரு பெண்ணுடன் லிவிங் டுகெதரி