ஒருபக்கம் மட்டும் தானா? மாளவிகாவின் மாஸ் போட்டோஷூட்டிற்கு நெட்டிசன்கள் கமெண்ட்ஸ்!

  • IndiaGlitz, [Thursday,January 27 2022]

’மாஸ்டர்’ நடிகை மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படத்திற்கு ஒரு பக்கம் மட்டும் தானா? என பல நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் அளித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ படத்தில் ஒரு சிறு கேரக்டரில் நடித்த மாளவிகா மோகனன், தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தில் நாயகியாக நடித்து இருந்தார் என்பதும் அதேபோல் தனுசுடன் அவர் நடித்து முடித்துள்ள ’மாறன்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் மாளவிகா மோகனன் அவ்வப்போது வெளியிடும் கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு லட்சக்கணக்கில் லைக்ஸ் குவியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் மாலத்தீவில் எடுத்த கிளாமர் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படத்தில் முதுகுப்புறம் மட்டுமே இருப்பதை பார்த்த ரசிகர்கள், ஒரு பக்கம் தானா? மறுபக்கம் கிடையாதா? என கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருவது பதிவு செய்து வருகின்றனர். இந்த புகைப்படங்களுக்கு இரண்டு லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.