பார்க், பீச், சினிமா தியேட்டர்.. இப்ப மெட்ரோ ரயிலிலும்.. வைரலாகும் வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
காதலர்கள் ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துக் கொள்வதும் மடியில் படுத்து ரொமான்ஸ் செய்வதும் பார்க், பீச் மற்றும் சினிமா தியேட்டர்களில் தற்போது சர்வசாதாரணமாக பார்க்க முடிகிறது. ஆனால் பொதுமக்கள் பயணம் செய்யும் மெட்ரோ ரயிலிலும் தற்போது இதுபோன்ற செயல்கள் நடந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி மெட்ரோ ரயில் சமீபத்தில் ஒரு ஜோடி தரையில் உட்கார்ந்து ஒருவருக்கு ஒருவர் லிப் கிஸ் கொடுத்துக் கொண்டிருந்தனர். காதலனின் மடியில் தலை வைத்து காதலி படுத்திருக்க இருவரும் முத்தம் கொடுத்து கொண்டிருக்கும் இந்த காட்சியை பலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர்.
இந்த வீடியோ தற்போது தீயாக இணையத்தில் பரவி வருகிறது. இது டெல்லி மெட்ரோ ரயிலா? அல்லது ஆபாச மெட்ரோ ரயிலா? என்று பலர் இந்த வீடியோவுக்கு கமெண்ட்ஸ் பதிவு செய்துள்ளனர். அருகில் உள்ள மக்கள் எப்படி அமைதியாக இருக்கிறார்கள்? அவர்களுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட ஏன் பேசவில்லை? என்று இன்னொரு நெட்டிசன் பதிவு செய்துள்ளார்.
ஒரு சிலர் கிண்டலாகவும் கமெண்ட்களை பதிவு செய்திருந்தார். அந்த பெண் மூச்சுவிட முடியாமல் உயிருக்கு போராடுவதாகவும் அவருக்கு மூச்சு கொடுத்து அந்த இளைஞர் அவரை காப்பாற்ற முயற்சிப்பதாகவும் பதிவு செய்துள்ளனர். ஒரு சிலர் இருவரும் போதையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்,
இது போன்ற செயல்கள் பொதுமக்கள் பயணம் செய்யும் மெட்ரோ ரயிலில் ஏற்படாமல் இருக்க மெட்ரோ அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒரு சிலர் சீரியஸ் ஆக கருத்து தெரிவித்துள்ளனர்.
दिल्ली मेट्रो का नाम बदल के P०rnHub क्यों नहीं रख देते @DCP_DelhiMetro ? pic.twitter.com/dTeyraJaVf
— Dr. Ladla (@SonOfChoudhary) May 9, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com