பைக் ஓட்டி பழகுவது தவறா? தனுஷ் மகன் விவகாரம் குறித்து நெட்டிசன்கள் கேள்வி..!
- IndiaGlitz, [Saturday,November 18 2023]
நடிகர் தனுஷின் மகன் தனது வீடு அருகே பைக் ஓட்ட பழகிய போது அது குறித்த வீடியோ வைரலானதை அடுத்து காவல்துறை அவருக்கு ரூ.1000 அபராதம் விதித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து பைக் ஓட்டி பழகுவது தவறா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நடிகர் தனுஷின் வீடு சென்னை போயஸ் கார்டனில் உள்ள நிலையில் அவரது வீட்டின் அருகே தனுஷின் மூத்த மகன் யாத்ரா பைக் கற்றுக் கொள்ளும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரல் ஆனது.
17 வயதாகும் அவர் ஓட்டுநர் உரிமம் இல்லாமல், ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டியதை சமூக வலைதளங்களில் சிலர் விமர்சனம் செய்தனர். இதனை அடுத்து தனுஷ் வீட்டிற்கு சென்ற போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் தனுஷின் மகனுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
இந்த விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதில் சிலர் தனுஷின் மகன் அவரது வீட்டுக்கு பக்கத்தில் பைக் ஓட்ட கற்றுக் கொண்டது தவறா என்று சிலர் பதிவு செய்து வருகின்றனர். இருப்பினும் தகுந்த பயிற்சியாளர் இல்லாமல் ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்ட கற்றுக் கொள்வதும் தவறுதான் என்று சிலர் பதிவு செய்து வருகின்றனர்.