சோம்-ரம்யா திருமணத்திற்கு ஒப்புக்கொள்வீர்களா? நெட்டிசன் கேள்விக்கு பரசுராம் பாண்டியன் பதில்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் ஹவுஸ்மேட்ஸ்களின் உறவினர்கள் வருகை தந்த நிலையில் பிக்பாஸ் வீடே செண்டிமெண்ட் ஆக இருந்தது என்பதை பார்த்தோம். ஆனால் ரம்யாவின் சகோதரர் மற்றும் அம்மா வந்தபோது மட்டும் வீடே கலகலப்பாக இருந்தது. குறிப்பாக ரம்யாவின் சகோதரர் பரசுபாண்டியன் ஹவுஸ்மேட்ஸ்கள் அனைவரிடமும் சகஜமாகவும் ஜாலியாகவும் பழகினார்.
இந்த நிலையில் தனது பிக்பாஸ் அனுபவங்கள் குறித்து பரசுபாண்டியன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தபோது, அந்த வீட்டில் நான் இருந்த ஒரு மணி நேரத்தில் சோம் ஒரு அற்புதமான, அழகான மனிதர் என்பதை புரிந்து கொண்டேன் என்று கூறினார்.
அதற்கு ஒரு டுவிட்டர் பயனாளி ’ஒருவேளை சோம் மற்றும் ரம்யா விரும்பினால் ஏற்று கொள்வீர்களா? என்று கேட்டபோது அதற்கு பரசுபாண்டியன், ’அது அவர்கள் இருவரும் எடுக்க வேண்டிய முடிவு’ என்று கூறியுள்ளார்.
சோம் மற்றும் ரம்யா ஆகிய இருவருக்கும் இதுபோன்ற ஒரு நினைப்பு இருப்பது போல் இந்த 89 நாட்களில் பார்வையாளர்களுக்கு தெரியவில்லை என்றாலும் வரும் காலத்தில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout